கோடீஸ்வர வைர வியாபாரியின் ஒன்பது வயது மகள் துறவறம் பூண்டார்

குஜராத்தில் கோடீஸ்வர வைர வியாபாரியின் ஒன்பது வயது மகள் துறவறம் பூண்டார். 9 வயது என்பது விளையாட்டு பருவம் தான் ஆனால் இந்த வயதில் கடினமான துறவற வாழ்வு ஏற்றிருக்கிறார் சிறுமி

Update: 2023-01-19 08:45 GMT

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வைர வியாபாரி தனுஷ் சங்வியின் இரு மகள்களில் மூத்தவர் தான் இவர்.தனேஷ்  சங்விக்கு சொந்தமான சங்வி அண்ட் சன்ஸ் உலகின் பழமையான வைர நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிறுவனம் வைரங்களை பட்டைதீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. பணக்கார குடும்பத்தில்,அதி  ஆடம்பர வசதிக்கு மத்தியில் பிறந்து வளர்ந்தாலும் தேவன்ஷி குழந்தை பருவம் முதலில் ஆன்மீகத்தை தான் நாடினாராம். டிவி, சினிமா பார்ப்பது வெளியிடங்களுக்கு செல்வது என்று எந்த உலக வாழ்க்கை இன்பங்களையும் விரும்பவில்லை. ஒருமுறை இவர் மற்ற துறவிகளுடன் 700 கி.மீ பாதயாத்திரையும் சென்றிருக்கிறார். தங்கள் ஜெயின் சமூக வழக்கப்படி துறவறம் பூணவும் தீர்மானித்திருக்கிறார். அதை அவரது பெற்றோரும் ஏற்று அனுமதித்திருக்கின்றனர்.


இதை அடுத்து சிறுமி தேவன்ஷி துறவறம் ஏற்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அவருக்கு ஜெயின் துறவி விஜய் கீர்த்திகா சூரி முன்னிலையில் நேற்று துறவற தீட்சை அளிக்கப்பட்டது . இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், பங்கேற்ற ஒரு தடபுடல் ஊர்வலம் சூரத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது .அதில் ஆடம்பர ஆடை அணிகலன்கள் உடன் தேவன்ஷி அழைத்துவரப்பட்டார். அவரின் தந்தைக்கு பிற வைர வியாபாரிகள் போல் பெல்ஜியத்திலும் வியாபார தொடர்புகள் உண்டு. அதனால் அங்கும் இதுபோன்ற ஊர்வலம் நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் ஏராளமான சொத்துகளுக்கு அதிபதியாக இருப்பார். ஆனால் அவர் மனம் ஏனோ எளிய ஆன்மீக வாழ்க்கையிலேயே ஈடுபாடு கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் மகளான ஒன்பது வயது சிறுமி துறவறம் கொண்டிருப்பது வியக்க வைக்கிறது.



 


Similar News