காலம் என்பது கடப்பதற்கு மட்டும் தானா? - அறிவியல் மற்றும் ஆன்மீக பார்வை.!

காலம் என்பது கடப்பதற்கு மட்டும் தானா? - அறிவியல் மற்றும் ஆன்மீக பார்வை.!

Update: 2020-06-25 01:13 GMT

காலம் என்பது நம் எண்ணங்களை ஏறு வரிசையில் எண்ணுவதுதான். அதனாலேயே காலம் முன்னோக்கி விரிந்து செல்வதைபோல் தோன்றுகிறது "

- விவேகானாந்தர்

காலத்தை பற்றிய தெளிவும் அறிவும் பண்டைய இந்தியாவில் இருந்தது. காலம் என்பது என்ன? வெற்றிடம் என்பது என்ன? இரண்டிற்க்கும் உள்ள தொடர்பு என்ன்ன என்பது பற்றியெல்லாம், இந்திய ஞானிகள் தெளிவாக அறிந்திருந்தார்கள்!! நவீன விஞ்ஞானம் இதை சமீபத்தில் தான் கண்டுபிடித்து உணர்ந்திருக்கிறது.

காலமும் வெற்றிடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. "காலம் என்பது ஒருவர் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதையும் அல்லது வேகமாக நகர்வதை பொருத்து மாறுபடக்கூடியது" என்கிற தத்துவம் . நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்த காலம் சம்பந்தமான பல தாத்பர்யங்களில் ஒன்று.

இதை பின்னணியாகக் கொண்டு இந்த உதாரணத்தை அணுகி பாருங்கள்…

அதாவது ஒரு விண்வெளி வீரர் விண்கலத்தில் அமர்ந்து ஒளியின் வேகத்தில் விண்வெளியில் பயணித்து எத்தனை வருடங்கள் கழித்து திரும்பி வந்தாலும் அவர் கிளம்பும்போது இருந்த வயதையும் தோற்றத்தையும் கொண்டிருப்பார் பூமியில் அவருடைய வயதை கொண்ட ஒருவர் அவர் திரும்பி வரும்போது வயதான தோற்றத்தை கொண்டிருப்பார்.காலம் என்பது கடப்பதற்கு மட்டும் தானா?

- ஒரு அறிவியல் பார்வை

நவீன விஞ்ஞானம் இதை என்று "'Twin Paradox"' என அழைக்கிறது. ஒரு கடிகாரம் நிலையாக இருக்கும்போது நமக்கு ஒரு நேரக் கணக்கை காண்பிக்கும். அதே கடிகாரம் வேகமாக நகரும் போது அது காண்பிக்கும் நேரக்கணக்கு நிலையாக இருந்த கடிகாரம் காட்டிய நேரக்கணக்கை விட குறைவானதாக இருக்கும்.

ஒரு வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் நம்மால் பயணிக்கவோ அல்லது நகரவோ முடிந்தால் காலம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போய்விடும்.

வெற்றிடத்தில் நிலையான தன்மையுடன் அல்லது ஒரு குறிப்பிட்ட சீரான வேக்கத்தில் நம்மால் நகர அலது பயணிக்க முடியாததாலேயே காலம் என்ற ஒன்று நம்முன் விரிந்து கிடப்பது போல் தோன்றுகிறது.

இது ஐன்ஸ்டீனின் பல தாத்பரியங்களுள் ஒன்றாகும். இதற்கு இந்திய புரணாங்களில் நிறைய உதாரணங்களையும் சம்பவங்களையும் நம்மால் காண முடியும்.

புராண கால இந்தியாவில் "காகுத்மி " என்ற அரசன் தன் மகளாகிய ரேவதிக்கு சிறந்த மணமகன் வேண்டும் என்பதற்காக பிரம்மதேவரிடம் ஆலோசனை கேட்க பிரம்மலோகம் செல்கிறான். அப்போது பிரம்மாவிற்காக சில நிமிடங்கள் காத்திருந்து பிறகு அவரிடம் தான் வந்த காரணத்தை சொன்னபோது, பிரம்மா சிரித்துக்கொண்டே "நீ இப்போது பல யுகங்கள் கடந்து விட்டாய் இப்போது நீ பூமிக்குத் திரும்பி சென்றால் நீ பூமியில் வாழ்ந்தபோது இருந்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் " என்றார்.

அதன் பிறகு அவர் பூமிக்கு வந்து அந்த யுகத்தில் வாழ்ந்த ஶ்ரீ கிருஷ்ணனின் அண்ணனான பலராமருக்கு ரேவதியை மணம் முடித்தாக பாகவத புராணத்தில் ஒரு கதை உண்டு. இது "டைம் ட்ரவால் " என இன்று சொல்லப்படும் கால ஓட்டத்திற்கான ஒரு உதாரண கதை.

அரசன் காகுத்மியை போலவே சூரிய குலத்தில் வந்த வேறு ஒரு மன்னன் முசுகுந்தன். இம்மன்னன் இந்திரனுக்காக இந்திரலோகத்தில் ஒரு வருடம் தொடர்ந்து போர் செய்தான் ஆனால் அதே கால இடைவெளியில் பூமியில் பல ஆயிரம் வருடங்கள் கடந்து போயிருந்தது. இதை இந்திரனே அவனுக்கு தெரிவிக்கிறான்.

இதே போன்ற ஒரு செய்தியை "அத்வைத் வேதாந்தத்தை " விளக்குகிற "திரிபுரரகஸ்யம் " என்கிற நூலில் வருகிறது. அதில் "தங்கனா " என்ற முனிவர் மகாசேனன் என்கிற அரசனை சூட்சும உடல் எடுத்து விண்வெளியில் சந்திர சூரிய மண்டலங்கள் தாண்டி பயணிக்க வைத்து பிறகு அங்கிருந்து பல்வேறு யோகங்களையும் தேவர்கள் வாழும் இருப்பிடங்களையும் காண்பிக்கிறார் வைகுண்டத்தையும் கைலாசாத்தையும் அவனால் பார்க்க முடிகிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு முழு நாளில் நடந்தது போல் அவனுக்கு தோன்றியது. ஆனால் முனிவரோ இப்போது ஒரு லட்சத்தி 1,200,000,000 வருடங்கள் கடந்து விட்டதாக சொல்கிறார்.

நம் புராணங்களின் உட்பொருட்கள் யாவும் ஞானத்தை, முக்தியை, நல்லறத்தை, நல்லொழுக்கத்தை, ஆன்மீகத்தை மட்டுமே போதிப்பவை அல்ல அனைத்து அம்சங்களும் இன்று ஆராயப்படும் அறிவியலின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருந்தன என்பதற்கான உதாரணங்கள் இவை.

இன்றைக்கு நவீன விஞ்ஞானம் மார்தட்டும் உண்மைகள், கண்டுபிடிப்புகள் என அனைத்தின் சாரமும் நம் இந்திய கலாச்சாரத்தின் ஒவ்வொறு நிகழ்விலும், நம் புராணங்களின் ஒவ்வொறு பக்கத்திலும் சர்வ சாதரணமாக பயன்படுத்தப்பட்டிருப்பது, அளவிலா பெருமையையும், ஆளப்பரிய ஆச்சரயங்களையும் அள்ளி வழங்குகிறது.  

Similar News