இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருமலை பிரமோற்சவம் - எப்போது? விதிமுறைகள் என்ன? தேவஸ்தானத்தின் அறிவிப்பு

இந்த ஆண்டு திருப்பதி பிரமோற்சவம் விழாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் சேவைகள் நடைபெற இருப்பது பக்தர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-29 13:14 GMT

இந்த ஆண்டு திருப்பதி பிரமோற்சவம் விழாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் சேவைகள் நடைபெற இருப்பது பக்தர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழா வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி நடக்க இருக்கிறது அதனை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருமலை கோவிலின் நான்கு மாத வீதிகளில் வாகன சேவை நடக்க உள்ளது.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருமலையில் உள்ள அன்னமய பவனில் ஏற்ற திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட்ரமணா ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய தேவஸ்தான முதன்மைச் செயலாளர் ஏ.வி.தர்மரெட்டி பேசியதாவது, 'திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் தொடங்கி அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது, 27ஆம் தேதி கொடியேற்றம் 1'ம் தேதி கருட சேவை, இரண்டாம் தேதி தங்க தேரோட்டம், நான்காம் தேதி தேர் திருவிழா, ஐந்தாம் தேதி சக்கர ஸ்தானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ கொடியேற்றம் அன்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி திருமலைக்கு வந்து முதல்வர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார், தமிழ் புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை கருட சேவை வருவதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டல் நெரிசலை சமாளிக்க திருப்பதி தேவஸ்தானம் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம், முதியோர் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மற்றும் பிற சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.



மேலும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன, தனியாக வரும் புரோட்டோகால் வி.ஐ.பி பக்தர்களுக்கு மட்டுமே பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.


மேலும் முன்னெச்சரிக்கையின் நடவடிக்கையாக தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்படும். கோவில் மற்றும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் மின்னும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படும்.

பக்தர்களுக்கு சேவை செய்ய 3500 ஸ்ரீவாரி சேவா சங்கத் தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். புகைப்பட கண்காட்சி மற்றும் மலர் கலை, கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும். சுகாதாரத் துறையின் கீழ் தூய்மைப் பணியில் தீவிர கவனம் செலுத்தப்படும் அதற்காக கூடுதலாக 5000 பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.


மேலும் சேவைகளுக்கான தேவையான மருத்துவர்கள், முதல் சிகிச்சை மையங்கள் திருமலை முழுவதும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக கருட சேவை அன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். நடைபாதையில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கருட சேவை அன்றும், மறுநாள் மதியம் 12 மணி வரை திருப்பதி மலை பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.


Source - Maalai Malar

Similar News