அதிக பக்தர்களின் வருகையில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பதி ஏழுமலையான் கோவில் - முதலிடம் எது தெரியுமா?
அதிக பக்தர்கள் வருகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அதிக பக்தர்கள் வருகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
தனியார் நிறுவனமான ஓயோ நிறுவனம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் என்ற பெயரில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில் அதிகமான பக்தர்கள் பயணம் செய்த திருத்தலம் பட்டியலில் காசி விசுவநாதர் கோவில் முதலிடம் பிடித்துள்ளது.
அடுத்தபடியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலும், பூரி ஜெகன்னாதர் கோவில் மூன்றாம் இடத்தையும், அமிர்தசரஸ் பொற்கோயில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா பரவல் ஊரடங்கை தொடர்ந்து பிறகு பின்னர் திறக்கப்பட்ட கோவில்களில் பல கோவில்கள் பக்தர்கள் வருகை அதிகமாகியுள்ளது. ஓயோ நிறுவனம் பக்தர்கள் தங்கும் அறைகள் முன்பதிவு செய்த அடிப்படை ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.