மோடி அரசின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நாளை பிரம்மாண்ட காணொளி பேரணியை நடத்தும் தமிழக பா.ஜ.க..! #BJP #TNBJP

மோடி அரசின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நாளை பிரம்மாண்ட காணொளி பேரணியை நடத்தும் தமிழக பா.ஜ.க..! #BJP #TNBJP

Update: 2020-06-19 11:16 GMT

கடந்த 2014 மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்றது. தொடர்ந்து 2-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று, 2019 மே 30 ஆம் தேதி மோடி தலைமையில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது. 6 ஆண்டுகள் நிறைவு செய்து 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க சார்பில் 10 லட்சத்திற்க்கும் அதிகமானோர் பங்கேற்கும் பிரம்மாண்ட காணொளி பேரணி நடைபெறவுள்ளது.

இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசுகிறார். தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமை தாங்குகிறார். நாளை கால் சரியாக 11 மணிக்கு துவங்குகிறது.

கொரோனோ பரவலை கருத்தில் கொண்டு இந்த கூட்டம் காணொளி பேரணி மூலமாக துவங்கவுள்ளதாக தமிழக பா.ஜ.க அறிவித்துள்ளது

நாளை நடக்க இருக்கும் தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.

1) அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி-யில் ஒளிபரப்பு செய்யப்படும்.

2) தகவல் தொழில் நுட்ப அணி மூலம் 2000க்கும் அதிகமான முகநூல் பக்கங்களில் நேரலை ஒளிபரப்பப்படும்.

3) தமிழக பா.ஜ.க அதிகாரப்பூர்வ முகநூல், ட்விட்டர் மற்றும் யூடியூபில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.

4) 20க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.

இதன் லிங்க் பின்வருமாறு

Youtube: https://youtube.com/channel/UCHu5uspAq_0WOSkuA2RT4OQ

Facebook: https://facebook.com/BJP4TamilNadu/

Twitter: https://twitter.com/BJP4TamilNadu

Similar News