வேடிக்கையான, விந்தையான எதிர்க்கட்சித் தலைவராக தான் ஸ்டாலினை அனைவரும் பார்க்கிறார்கள் - அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்!

வேடிக்கையான, விந்தையான எதிர்க்கட்சித் தலைவராக தான் ஸ்டாலினை அனைவரும் பார்க்கிறார்கள் - அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்!

Update: 2020-04-18 13:40 GMT

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்ட மனம் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் இது போன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைப்பது எள்ளி நகையாடும் விஷயமாகத்தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என விமர்சித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரும்பணி ஆற்றி கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சரை பார்த்து ஸ்டாலின் காமாலை காரர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தான் தெரியும் என விமர்சித்துள்ளார், நாங்கள் அதேபோல அவரை பார்த்து ஒன்று சொல்லுகிறோம் மஞ்சள் துண்டு அணிந்த கட்சிக்கு காண்பதெல்லாம் மஞ்சலாக தான் தெரியும்! இந்த நேரத்தில் அரசோடு கைகோர்க்க வேண்டும், பாராட்ட மனம் இல்லாமல் கீழ்தரமான விமர்சனம் முன்வைப்பது ஏற்புடையதல்ல என பதிலடி கொடுத்தார்.

ஒரு வேடிக்கையான, விந்தையான எதிர்க்கட்சித் தலைவராக தான் ஸ்டாலினை அனைவரும் பார்க்கிறார்கள், அவர் ஆக்கபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக செயல்படவில்லை, தி.மு.க உடைய 38 எம்பிக்கள் வீட்டில் எப்படி அமைதியாக இருக்கிறார்களோ, அதே போல மு.க ஸ்டாலின் வீட்டிலேயே அமைதியாக இருந்தால் கொரோனாவை முழுமையாக ஒழித்து விடலாம் என கூறினார்.

Similar News