உள்நாட்டு சுற்றுலா அதிகரிக்க ஆன்மீக சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு
மக்களின் வாழ்வாதாரத்தை சுற்றுலா அதிகரிப்பதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் பத்ராசலத்தில் உள்ள சீதாராமச்சந்திர சுவாமி கோவிலுக்கு சென்றார். வாசலில் அவருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்பம் மரியாதை அளித்தனர். கோவிலில் ஜனாதிபதி சிறப்பு பூஜை செய்தார். சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பிறகு அவருக்கு அர்ச்சகர்கள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். அவருடன் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் சென்றனர்.
பத்ராசலத்தில், பத்ராசல குழும கோவில்களில் புனித பயண வசதிகளை உருவாக்குவதற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- தெலுங்கானாவில் உள்ள கோவில்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பக்தர்கள் ஆவார்கள். எனவே உள்நாட்டு சுற்றுலா அதிகரிக்க ஆன்மீக சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு. சுற்றுலா மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கிறது. வருமானத்தை பெருக்குகிறது. உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பத்ராசலத்தில் தெலுங்கானா வனவாசி கல்யாண் பரிஷத் ஏற்பாடு செய்த சம்மக்கா சரளம்மா ஜன்ஜாதி பூஜாரி மாநாட்டை ஜனாதிபதி தொடங்கி வைத்தார். மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏகலைவா மாதிரி உள்ளுறை பள்ளிகளை திறந்து வைத்தார். வாரங்கல் மாவட்டத்தில் ராமப்பா கோவிலுக்கும் ஜனாதிபதி சென்றார். அங்கு சுற்றுலா கட்டமைப்புகளை உருவாக்கவும் காமேஷ்வராலயா கோவிலை மறு சீரமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.