இந்தியாவை பழி வாங்குவதாக நினைத்து வானை நோக்கி காறி உமிழ்ந்த பாகிஸ்தான் - தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட முடிவு!

இந்தியாவை பழி வாங்குவதாக நினைத்து வானை நோக்கி காறி உமிழ்ந்த பாகிஸ்தான் - தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட முடிவு!

Update: 2019-08-08 12:46 GMT

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தால் பாகிஸ்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும் நடவடிக்கையால் பாகிஸ்தானில் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


பாகிஸ்தானில் இருந்து வாஹா எல்லை வழியாக இந்தியா வரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு இன்று அதிரடியாக நிறுத்தியது. சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் பிற்பகல் 1 மணி அளவில் பாதியில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்து வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இனி இந்திய சினிமாக்கள் எதுவும் பாகிஸ்தான் தியேட்டர்களில் திரையிடப்படாது என அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத்துறையின் பிரதமருக்கான சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆசிக் அவான் தெரிவித்துள்ளார்.


கடந்த முறை புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா விதித்த தடையால் அங்கு தக்காளி கிலோ ரூ.250க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போல் இங்கு இருந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொருட்கள் விலைகள் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது.மத்தியபிரதேசம், டெல்லி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து தினமும் சுமார் 3000 டன் தக்காளி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.


இதனால் இந்த தக்காளி மற்ற நாடுகளின் வழியாக செல்லும் போது விலை அதிகரிக்கும்.வர்த்தக தடையால் பாதிக்கப்போவது பாகிஸ்தான் தான் இந்தியா அல்ல என இந்திய வணிகர்கள தெரிவித்து உள்ளனர். 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில், பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 452.5 மில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 7.13 மில்லியன் டாலர்களாகவும் இருந்தது. 19 நிதியாண்டில் பாகிஸ்தானுக்கு மொத்த ஏற்றுமதி 2.06 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 495 மில்லியன் டாலர்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.



Similar News