அத்துமீறு! கூலிப்படையை ஏவு! - கூலிப்படையை ஏவிய வி.சி.க மகளிரணி துணைத்தலைவி
கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்தியதாக வி.சி.க மகளிர் அணி துணைத்தலைவி மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்தியதாக வி.சி.க மகளிர் அணி துணைத்தலைவி மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடன் தொகையை வாங்குவதற்காக கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி ஞானமணியை சில நாட்களுக்கு முன்பு கடத்தி சென்று பணம் கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
புகாரின் பேரில் தமிழழகன், வேல்முருகனை கைது செய்து போலீசார் விசாரித்ததில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைத்தலைவி சுதாவிடம் ஞானமணி ஒன்னரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியதையும் அதனை திருப்பி வாங்க அவரும் வி.சி.க ஒன்றிய செயலாளர்கள் கூலிப்படையை அனுப்பியதையும் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து சுதாவை கைது செய்த போலீசார் ரவி உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.