கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவ காரணம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான், தி.மு.க-வோ கருணாநிதியோ இல்லை! உடைக்கப்படும் திராவிட பொய் மூட்டைகள்!

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவ காரணம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான், தி.மு.க-வோ கருணாநிதியோ இல்லை! உடைக்கப்படும் திராவிட பொய் மூட்டைகள்!

Update: 2019-11-05 00:45 GMT

திருவள்ளுவர் குறித்த சர்ச்சை தமிழகத்தில் நடந்துக் கொண்டு இருக்கும் வேளையில், கன்னியாகுமரியில் கம்பீரமாக இருக்கும் திருவள்ளுவர் சிலை நிறுவ யார் காரணம் என்ற கேள்வி தற்போது பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது. இத்தனை காலம், தி.மு.க-வும், கருணாநிதியும் தான் அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவினர் என்று தி.மு.க-வினர் வழக்கம் போல பொய் மூட்டைகளை அவிழ்த்து தமிழர்களை முட்டாள்களாக்கி வந்தது அம்பலமாகி உள்ளது.


இது குறித்து தமிழக பா.ஜ.க பட்டியலின பிரிவு மாநில தலைவரும், எழுத்தாளருமான ம.வெங்கடேசன் ஒரு முகநூல் பதிவை வெளியிட்டு உள்ளார்.


அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:


கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலகாரணம் யார் தெரியுமா? திக-வும் இல்லை; திமுக-வும் இல்லை.


கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கருணாநிதிக்கா, வீரமணிக்கா.... இல்லை.


ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்கான ஏக்நாத் ரானடே என்கிற மகத்தான கர்மயோகிக்குதான். 


கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டி மற்றும் விவேகானந்தா கேந்திரத்திடம் ஒப்படைத்திருந்தது தமிழக அரசு.


சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை 17-7-1977ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.


ஒப்படைத்த து மட்டுமல்லாமல், 15-3-1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்கிற திட்டத்தை அனுப்பியது விவேகானந்தா கேந்திரம். அனுப்ப ஏற்பாடு செய்தவர் ஏக்நாத் ரானடே அவர்கள்.


அதன் காரணமாக தமிழக அரசாங்கமும் அதை ஏற்றுக் கொண்டு திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போதைய முதல்வராக இருந்த திரு.எம்ஜிஆர் அவர்களாலும் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களாலும் 15-4-1979ல் கன்னியாகுமரில் நாட்டப்பட்டது.


ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு முதல் காரணம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஏக்நாத் ரானடே அவர்கள்தான். இந்து அமைப்புதான் காரணம்.




https://www.facebook.com/mave.mv.5/posts/1742997515834548


ஆக, இத்தனை காலம் திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் நிறுவியது தி.மு.க என நம்மை ஏமாற்றி வந்தவர்கள் நம்மை மூளை சலவை செய்துள்ளதும் நமக்கு புலப்படுகிறது.


கன்னியாகுமரியில் கம்பீரமாக நிற்கும் ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான் என்பது தான் வரலாற்று உண்மை, அதை யாராலும் அழிக்க முடியாது.


Similar News