தினகரனின் அ.ம.மு.க., கட்சிக்கு அன்பின் அடையாளத்தை குறிப்பிடும் தேர்தல் பொது சின்னம்.. கட்சியினர் மனமுவந்து ஏற்றனர்..!

தினகரனின் அ.ம.மு.க., கட்சிக்கு அன்பின் அடையாளத்தை குறிப்பிடும் தேர்தல் பொது சின்னம்.. கட்சியினர் மனமுவந்து ஏற்றனர்..!

Update: 2019-03-29 03:39 GMT

தினகரனின் அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி (GIFTBOX) சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி பொதுச்சின்னம் பெற்றிருப்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆர்கேநகரில் போட்டியிட்டு குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றார் தினகரன்.


இது பிரபலமானது என்பதால் தங்களின் கட்சிக்கு குக்கர் சின்னமே ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையில் பதிவு செய்யப்படாத கட்சிக்கு ஒரு சின்னத்தை ஒதுக்க கோரும் உரிமை கிடையாது என தேர்தல் கமிஷன் கூறியது.


தினகரன் கட்சிக்கு பொதுச்சின்னம் வழங்க பரிசீலிக்கலாமே என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். சுயேச்சையாக கருதப்படும் வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.


இந்நிலையில் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னம் வழங்கி இருப்பதாக தினகரன் கட்சியின் வக்கீல் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து லோக்சபா மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தலில் தினகரன் கட்சியினர் பொதுச்சின்னமான பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.


Similar News