இன்டர்நெட்டோட இரு பக்கம் - எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எச்சரிக்கை நிறைந்ததாக இருக்க வேண்டும்!

இன்டர்நெட்டோட இரு பக்கம் - எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எச்சரிக்கை நிறைந்ததாக இருக்க வேண்டும்!

Update: 2020-01-18 03:18 GMT

சிறிய நாணயம் முதல், இரவு பகல், நன்மை தீமை என அனைத்திற்கும் இரு வேறு முகங்கள் உண்டு. இன்றைய நவீன உலகை
தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் தொழில்நுட்பமும் அதன் கிளையான இணையமும்
அதற்கு விதிவிலக்கல்ல. இணையத்தின் மடியில் மலர்ந்த சமூக ஊடகம் அடைந்திருக்கும்
வளர்ச்சி பிரமாண்டமானது. குண்டூசி முதல் கப்பல் வரை இலட்சக்கான பொருட்களின்
விளம்பரம், பொருட்கள், கோடிகளில்
வியாபாரம், அளவில்லா அறிவுரை, ஆட்சியையே
மாற்ற வல்ல அரசியல், நுட்பமாக இதனூடே இயங்கும் மனித உறவுகள்
என சமூக ஊடகங்கள் தாங்கி பிடிங்கும் தளங்கள் ஏராளம் அசந்தால் நம்மையே கவிழ்க்க
கூடிய இந்த அபாய கயிற்றில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எச்சரிக்கை
நிறைந்த்தாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதன்
மூலம் நிகழும் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் சில பட்டியலிடப்பட்டுள்ளன அவை


எதிர்மறை தாக்கங்கள்


·        தவறான நட்பு


·        தனிமை அதிகரித்தல்


·        மனரீதியான
பாதிப்புகள்


·        சுருங்க எழுதவேண்டிய
கட்டாயத்தில் மொழியின் வளமை, இலக்கணம், செறிவான பயன்பாடு குறைதல்


·        பாதுகாப்பற்ற அந்தரங்கம்


·        அச்சுறுத்தல்


·        நேர விரயம்


நேர்மறை தாக்கங்கள்


·        ஒட்டுமொத்த
உலகத்தையும் ஒற்றை புள்ளியில் இணைத்தல்


·        தகவல்கள், தரவுகளின் விரைவான
பரிமாற்றம்


·        தொடர்புகளை
வலுப்படுத்தல்


·        வியாபாரத்தை
விரிவுப்படுத்தல்


·        அனைவரையும் சமமாக
பாவித்தல


·        நினைவுகளை பகிர்ந்து
மகிழும் தளம்


Similar News