அதிநவீன அக்னி ப்ரைம்- ஏவுகணை சோதனை வெற்றி!
அதிநவீன அக்னி பிரம் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன அக்னி பிரம் ஏவுகணை ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இச் சோதனை புதன்கிழமை மாலை நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அணு ஆயுதப்பிரிவு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இணைந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன புதிய தலைமுறை அக்னி ப்ரம் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் ஏப்ரல் மூன்றாம் தேதி இரவு வெற்றிகரமாக சோதனை செய்தன. 1000 கிலோமீட்டர் முதல் 2000 கிலோமீட்டர் வரையில் இலக்குகளை தாக்கக் கூடிய வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவிகள் சேகரித்த தரவுகளின் படி இந்த ஏவுகணை சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளதை உறுதி செய்ய முடிகிறது. இந்நிகழ்வில் முப்படை தலைமை தளபதி அணில் சவுகான் டி.ஆர்.டி.ஓ உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டது. அக்னி ப்ரைம் எவகனை சோதனையை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக டி ஆர் டி ஓ அணு ஆயுத பிரிவு மற்றும் ராணுவத்தினருக்கு பாதுகாப்பை தெரிவித்த அஜினா ஏவுகணை நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அதி நவீன அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை தாக்கிவிட்டு மீண்டும் திரும்பக்கூடிய வகையிலான எம்.ஐ.ஆர்.வி என்ற நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 5,000 km வரையிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன் உடையதாகும் .அதே போல் எழுநூறு கிலோ மீட்டர் முதல் 3500 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளை தாக்கக்கூடிய அக்னியின் முதல் நான்கு ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தின் செயல்பாட்டில் உள்ளன. நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பல்வேறு ஏவுகணைகளை இந்தியா தொடர்ந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
SOURCE :Dinamani