அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி யோகா பயிற்சி..! #InternationalYogaDay #YogaDay #MyLifeMyYoga

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி யோகா பயிற்சி..! #InternationalYogaDay #YogaDay #MyLifeMyYoga

Update: 2020-06-21 03:23 GMT

இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இன்று யோகா பயிற்சி செய்து வருகின்றனர். கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், யோகா-வின் தேவையை உலகம் இன்று உணர்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று நோய் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை தரும் நிலையில், பிராணாயமம் செய்வதால் சுவாசம் மற்றும் இருதயம் உறுதியாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த், யோகா குரு பாபா ராம்தேவ், பாதுகாப்பு படையினர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் யோகா பயிற்சி செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்துள்ளார். சீக்கியர், இஸ்லாமியர், கிறிஸ்துவர், பெளத்தர் என்று அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் யோகா பயிற்சி செய்துள்ளனர். 

மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், உத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் இன்று யோகா பயிற்சி செய்துள்ளனர். 

Similar News