உலகளவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பு ! ஐ.நா பொதுச்செயலாளர் கூறிய பரபரப்பு கருத்து !

Update: 2021-10-13 03:48 GMT

கொரோனா வைரஸ் தொற்றால்  உலகம் முழுவதிலும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம்  நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்  "கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது அல்லது இல்லை. சுகாதார பராமரிப்பு இல்லை. அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை" என கூறினார்.

கொரோனா தொற்று குறையாத நிலையில் பத்து கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் உலக அளவில்  பேசு பொருளாகவுள்ளது.

Image : The Economist

Maalaimalar


Similar News