ரூ 1000 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்கா முடிவு, செய்த உதவிக்கு கைமாறு ?

ரூ 1000 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்கா முடிவு, செய்த உதவிக்கு கைமாறு ?

Update: 2020-04-14 13:18 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 18லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,10,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அமெரிக்காவில் 5,70,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியாவிடம் ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்து வேண்டும் என தெரிவித்தார். மேலும் மருந்தை தரவில்லை என்றால் இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த மருந்து மலேரியா நாட்டை சேர்ந்தது இதை தான் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனாவிற்காக பயன்படுத்துகிறார்கள்.

பின்னர் இந்தியா அமெரிக்காவிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அனுப்பி வைத்தது. மேலும் சில நாடுகளுக்கு இந்தியா மருந்தை அனுப்பி வைத்தது. இதன் இடையே இந்தியா - அமெரிக்கா நட்பில் விரிசல் எற்பட்டுள்ளது என கூறப்பட்ட நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அதில் 'மோடி கிரேட். ரியலி குட்' என பாராட்டினார். இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்பு தற்போது மிகவும் வலிமை ஆகியுள்ளது.

இந்த நிலையில் ரூபாய்.1000 கோடி மதிப்பிலான முக்கிய ஏவுகணைகளை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது. இந்த செய்தியை அதிபர் டிரம்ப் கடிதத்தின் மூலம் அந்நாட்டு காங்கிரஸ் அவைக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் செய்த பிறகு இந்தியாவிற்கு அனுப்பப்படும். அதில் ஹார்பூன் பிளாக் 11 (Harpoon Block 11 ) மற்றும் டார்ப்பீடோஸ் (torpedoes) ஏவுகணைகளை அனுப்ப படவுள்ளது.

மேலும் 10 ''AGM-84L வகை ஹார்பூன் பிளாக் 11'' இந்த ஏவுகணை வானத்தில் விமானத்தில் இருந்து செலுத்தப்படும். பிறகு 16 ''MK 54 வகை டார்ப்பீடோஸ் (Lightweight Torpedoes) இந்த ஏவுகணை கடலுக்குள் இருந்து வெளியே மற்றும் கடலுக்கு உள்ளே சென்று தாக்கும். இந்த ஏவுகணை மிக பயங்கரமான சக்தி வாய்த்த ஏவுகணைகள்.

இந்த ஏவுகணைகளை தான் அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பட்ட முடிவு எடுத்து உள்ளது. இந்தியா இந்த ஏவுகணைகளை விமானப்படையில் மற்றும் கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியாவிடம் டார்ப்பீடோஸ் வகையான ஏவுகணை பெரிய அளவில் இல்லை. இதனை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்.

இந்தியா ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை அமெரிக்காவிற்கு கொடுத்ததற்கு தான் இந்த உதவியை அமெரிக்கா செய்கிறது என கூறப்படுகிறது.  

Source: https://tamil.oneindia.com/news/new-york/coronavirus-trump-ordered-to-send-missile-and-torpedoes-worth-1-thousand-crores-to-india/articlecontent-pf449837-382608.html

Similar News