அமெரிக்காவின் அஸகாய பலத்தை அசைத்துப் பார்க்கும் கொரோனா : நேற்று ஒரே நாளில் 2,400 பேர் உயிரிழப்பு, டிரம்ப் அதிர்ச்சி செய்தி.!

அமெரிக்காவின் அஸகாய பலத்தை அசைத்துப் பார்க்கும் கொரோனா : நேற்று ஒரே நாளில் 2,400 பேர் உயிரிழப்பு, டிரம்ப் அதிர்ச்சி செய்தி.!

Update: 2020-04-15 07:05 GMT

அமெரிக்காவில் புதிதாக நேற்று மட்டும் 27 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள் என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த 10ம் தேதி அதிகபட்சமாக 2,074 பேர் உயிரிழந்திருந்த நிலையில் அதைக்காட்டிலும் அதிகமாக நேற்று உயிர்பலி ஏற்பட்டுள்ளது. அதில் பாதிப்பின் மையமாக திகழும் நியூயார்க் நகரில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆயிரத்து 842 ஆகவும், பாதிக்கப்பட்டோர் 2 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் நேற்று அளித்த பேட்டியில் " கரோனா வைரஸுக்கு எதிரானப் போரில் கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் விலைமதிப்பில்லா மனித உயிர்களை நாள்தோறும் இழந்து வருகிறோம்.

இப்போது இருண்ட குகைக்குள் இருக்கிறோம், விரைவில் குகையின் முடிவில் நாம் ஒளியைக் காண்போம். கரோனா வைரஸுக்கு எதிரான ஒவ்வொரு தடுப்பு நடவடிக்கையையும் மிகவும் வலிமையாக எடுத்து வருகிறோம்

எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஒரு லட்சம் பேருக்கு 35 ஐசியு படுக்கை வசதி மையங்களை வைத்துள்ளோம். இத்தாலியில் இது 12 படுக்கை மையங்களாகவும், பிரான்ஸில் 11 ஆகவும், ஸ்பெயினில் 9 ஆகவும் இருக்கிறது. 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மருத்துவமனைகளில் இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

Source: https://www.hindutamil.in/news/world/549612-covid-19-us-registers-record-one-day-toll-of-2-129-total-crosses-25-000.html?

Similar News