வீதிக்கு வீதி டாஸ்மாக் வைத்துக்கொண்டு போதைப்பொருளை ஒழிப்பேன் நாடகமாடும் அரசு இது - வானதி சீனிவாசன்

போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என முதல்வர் பேசிக்கொண்டு வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை திறந்து வைத்து இரட்டை வேடம் போடுகிறார் என்று வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2022-08-21 14:45 GMT

போதைப்பொருளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை திறந்து வைத்து தி.மு.க இரட்டைவேடம் போடுகிறது என்று வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டினார்.

பெரம்பலூரில் நேற்று பா.ஜ கட்சியின் தரவு மேலாண்மை பிரிவு சார்பில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.அதில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

தி.மு.க தலைவர் உட்பட கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி யவர்கள் மீது புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுபோல பேசுபவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் அரசாக உள்ளது இந்த அரசு. ஒரு சாராருக்கு ஆதரவாக இருப்பதை மக்களிடம் பா.ஜ.கட்சி எடுத்துச் சொல்லும்.

உண்மையிலேயே தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் முன்னணியில் இருந்து ஆர்ப்பாட்டமும்,அரசியலும் இல்லாமல் பணி செய்யயம் இயக்கத்தை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும். பா.ஜ கட்சியில் பட்டியல் இனத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து,பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என முதல்வர் பேசிக்கொண்டு வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை திறந்து வைத்து இரட்டை வேடம் போடுகிறார்.தி.மு.க ஆட்சியில் பல ஊராட்சி தலைவர்கள் கொடியேற்ற கூட முடியாமல் உள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Source - Dinamalar

Similar News