“சித்தராமையா முடிவின்படியே ராஜினாமா செய்தோம்” - போட்டு உடைத்தார் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ!!

“சித்தராமையா முடிவின்படியே ராஜினாமா செய்தோம்” - போட்டு உடைத்தார் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ!!

Update: 2019-07-26 07:41 GMT


கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சிவராம் ஹெப்பர் கடந்த 6-ஆம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மும்பைக்கு சென்று விட்டார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில் அவர் நேற்று பெங்களூருக்கு திரும்பினார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-


காங்கிரஸ் முன்னாள் முதல்வர், சித்தராமையாவின் வழி காட்டுதலின் படியே எம்.எல்.ஏ. பதவியை மட்டும் ராஜினாமா செய்திருந்தோம். அதன் பிறகு மும்பை சென்று விட்டோம்.


பா.ஜ.க.வுடன் நாங்கள் தொடர்பில் இருந்ததில்லை. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் எல்லோரும் இன்னும் காங்கிரசில்தான் இருக்கிறோம். இன்றைக்கும் சித்தராமையா தான் எங்கள் தலைவர்.


சிறிது நாட்கள் மட்டும் நாங்கள் விலகி இருக்குமாறு சித்தராமையா கூறி இருந்தார். அதன்படி நடந்து கொண்டிருக்கிறோம். சித்தராமையாவின் முடிவின்படி எதிர்காலத்தில் நடந்து கொள்வோம்.


மத சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு மீது எங்களுக்கு அதிருப்தி இருந்தது உண்மைதான். அதற்காகத்தான் அரசை விமர்சித்து விட்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் உண்மை முகம் வெளிசத்துக்கு வந்துள்ளது.


Similar News