'சமாதானம் வேண்டும்தான், அதற்காக இதை சகிக்க முடியாது'.. பாதுகாப்பு அமைச்சர்.!

'சமாதானம் வேண்டும்தான், அதற்காக இதை சகிக்க முடியாது'.. பாதுகாப்பு அமைச்சர்.!

Update: 2020-12-19 18:00 GMT

 பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவுடனான எல்லை மோதலைக் கையாண்டது குறித்து பேசியபோது, இந்தியா பலவீனமாக இல்லை என்பதையும், எந்தவிதமான மீறல், ஆக்கிரமிப்பு அல்லது ஒருதலைப்பட்ச செயல்களுக்கும் பொருத்தமான பதிலை இந்திய ராணுவம் அளிக்கக்கூடும் என்றும் கூறினார்.

இந்த பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், இந்தியா அமைதியான முறையில் மோதல்களைத் தீர்க்க விரும்புகிறது என்றும், ஆனால் தன்னுடைய சுய மரியாதைக்கு எந்தத் தீங்கும் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

துண்டிகுல் விமானப்படை நிலையத்தில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "கொரோனா காலங்களில் சீனாவின் இந்த அணுகுமுறை அந்த நாட்டின் நோக்கங்களை பிரதிபலிக்கிறது என்றார். ஆனால் இந்தியா பலவீனமாக இல்லை என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். இது புதிய இந்தியா, இது எந்தவிதமான மீறல், ஆக்கிரமிப்பு அல்லது ஒருதலைப்பட்ச செயல்களுக்கு பொருத்தமான பதிலைக் கொடுக்கும்"  என்று அவர் கூறினார்.

பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு அமைச்சர், “நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், நாங்கள் மோதலை விரும்பவில்லை. அமைதியை விரும்புகிறோம்” என்று கூறினார்.
"ஆனால் நாட்டின் சுய மரியாதைக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது என அவர் மேலும் கூறினார்.

மேற்கு எல்லையைப் பற்றி ராஜ்நாத் சிங் குறிப்பிடுகையில், பாகிஸ்தான் எல்லைகளில் மோதல்களில் ஈடுபடுவதாகவும், நான்கு போர்களில் இந்தியா தோற்கடித்த போதிலும், பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி பினாமி போரில் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டினார். ஆயுதப்படைகளும் காவல்துறையும் பயங்கரவாதத்தை திறம்பட கையாண்டு வருவதாக அவர் கூறினார்.

 நாடு பயங்கரவாதத்தை நாட்டிற்குள் திறம்பட கையாள்வது மட்டுமல்லாமல், எல்லைகளுக்கு அப்பால் நடவடிக்கை எடுப்பதும் கூட தற்போது நடக்கிறது என பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைக் குறிப்பிட்டு அவர் கூறினார். இது உலகளவில் இந்தியாவின் இராணுவ வலிமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நாட்டின் உறுதியான நோக்கங்களை நிரூபிக்கிறது என்றும் அவர் கூறினார். 

Similar News