பிரதமர் மோடியை பாராட்டவேண்டும் குறை மட்டும் கூறினால் அது எடுபடாது - காங்கிரஸ் மூத்த தலைவர்கள்!!

பிரதமர் மோடியை பாராட்டவேண்டும் குறை மட்டும் கூறினால் அது எடுபடாது - காங்கிரஸ் மூத்த தலைவர்கள்!!

Update: 2019-08-23 10:26 GMT

பிரதமர் நரேந்திர மோடியை தனி நபர் தாக்குதல் இனியும் எடுபடாது என்றும், அவரின் நல்ல திட்டங்களுக்கு மதிப்பளித்து எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிதம்பரம் கைதாகி உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் பேட்டி காங்கிரஸ் கட்சியின் உள்ளே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


காங்கிரஸ் ஆட்சியில் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் ஜெய்ராம் ரமேஷ், அவர் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது “நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை என்ன செய்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஏன் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார் என்பதை ஆராய வேண்டும் மக்களிடம் தொடர்பு கொள்ளும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார் கடந்த காலங்களில் நாம் செய்யாத வேலைகளை அவர் செய்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளாத வரையில், அவரை நம்மால் எதிர்கொள்ள முடியாது.


அவரை மட்டும் எதிர்கட்சிகள் அனைத்து நேரங்களிலும் குறைகூறிக் கொண்டே இருந்தால்,அதுவும் எடுபடப் போவதில்லை. அரசு நிர்வாகத்தில் அவர் செய்த நல்ல திட்டங்களுக்கும் காரியங்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்” தொடர்ந்து, “2019 தேர்தலின் போது அவரின் திட்டங்களில் சிலவற்றை நாம் கேலி செய்தோம்.


மிகவும் ஏழைக் குடும்பங்களுக்கு, எரிவாயு சிலிண்டர் அளிக்கும் திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, அவரை கோடான கோடி நாட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. நாம் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து நடந்து முடிந்த தேர்தலில் அதிகமாக பேசினோம்.மக்களோ, அதற்கு பிரதமர் மோடி காரணமில்லை என்று நினைத்தனர். அவர் எப்படி இப்படிப்பட்ட மதிப்புமிக்க மனிதராக மாறினார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”அதுவே அவரை மீண்டும் வெற்றி பெற வைத்தது. என்று பேசினார்


ஜெய்ராம் ரமேஷின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும், தேசிய அரசியலிலும் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதை வரவேற்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி, அபிஷேக் சிங்வி, “


பிரதமர் மோடியை தூற்றுவது மட்டும் போதாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஒரே மாதிராயான எதிர்ப்புப் பிரசாரம் அவருக்கு சாதகமாக அமையும். அவரின் செயல்பாடுகள் திட்டங்களின் அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும். உஜ்வாலா திட்டம், அவர் கொண்டு வந்ததில் சில நல்ல திட்டங்களில் ஒன்றுதான்” என்று ஜெய்ராம் ரமேஷுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.




https://twitter.com/DrAMSinghvi/status/1164735118079959040

Similar News