டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? டிஜிட்டல் கரன்சிக்கும் பணத்திற்குமான வேறுபாடு

டிஜிட்டல் கரன்சி என்பது கண்ணுக்கு தெரியாத பண பரிவர்த்தனையின் புதிய வடிவம் ஆகும். 'மின்னணு பணம்' எனப்படுகிறது.

Update: 2022-11-18 07:30 GMT

டிஜிட்டல் கரன்சி என்பது கிரிப்டோ, ஸ்டேபேல் காயின், மதிய வங்கி, என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பிரிவுகளும் பிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்திலோ அல்லது இதுபோன்று உள்ள பிற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பணத்திற்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


பணம் என்பது ஒரு நாட்டு அரசால் மதிப்பிடப்பட்டு , அச்சிடப்படுகிறது .அந்த பணத்தை மக்களும் வங்கியும் பயன்படுத்துவதற்கு மூன்றாவது தரப்பு நிச்சயம் தேவை. அதில் மூன்றாவது தரப்பு என்பது வங்கியின் மென்பொருள். இந்த மென்பொருள் தான் நமது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது?அதை யாருக்கு பரிமாற்றம் செய்கிறோம்? போன்ற விவரங்களை பதிவு செய்கிறது. அதேபோல ஆன்லைன் பரிமாற்றம், ஏ.டி.எம் கார்டு போன்ற பயன்பாட்டிற்கும் இந்த மென்பொருள் தான் காரணம்.இந்த மென்பொருள் இருப்பதால்தான் ஒரு வங்கியில் நாம் வைத்து இருக்கும் பணத்தை வெவ்வேறு வங்கி ஏ.டி.எம் களிலும் எடுக்க முடிகிறது. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது பணத்தை கையாள்வதில் வங்கியும் மக்களும் மட்டுமே போதாது. மூன்றாம் தரப்பான இந்த மென்பொருள் கட்டாயம் தேவை. இந்த மென்பொருள் இல்லாவிட்டால் காகிதமாக இருக்கும் இந்த பணத்தை கூட நம்மால் இப்போது பரிமாற்றம் செய்ய முடியாது.


ஆனால் டிஜிட்டல் கரன்சி என்பது இரண்டு தரப்பு மட்டுமே இருக்கும். அதாவது மென்பொருள் மற்றும் மக்கள் இடையே நடக்கும் பரிமாற்றம் மட்டும்தான் டிஜிட்டல் கரன்சி. அதில் வங்கிகளுக்கும், பணத்தை அச்சிடும் அரசுக்கும் வேலை கிடையாது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பண பரிமாற்றத்திற்கு மூன்றாம் தரப்பு இருக்க வேண்டும் என்ற நிலை உருவானபோது வங்கிகள் வேண்டாம், இரண்டு தரப்பு மட்டும் போதும் என்ற வாதம் எழுந்தது. ஆனால் மூன்றாம் தரப்பு இல்லாமல் பணப்பரிமாற்றம் நடக்காது என்று நிதியாளர்கள் கூறினர். ஆனால் அது சாத்தியமே என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டது தான் டிஜிட்டல் கரன்சி. அதுதான் டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி.



இந்த கிரிப்டோ கரன்சியில் உள்ளவை தான் பிட்காயின், எத்திரியம் , டோகி போன்ற ஆயிரக்கணக்கான காயின்கள். அப்படி என்றால் நமக்குள் எழும் அடுத்த கேள்வி பணத்தை அரசு அச்சிடவில்லை என்றால் டிஜிட்டல் கரன்சி எப்படி உருவாகிறது? அதற்கு எப்படி மதிப்பு கிடைக்கிறது ?அதனை எப்படி பரிமாற்றம் செய்ய முடியும் என்ற கேள்விகள் எழலாம். அதற்கான விடை தான் இந்த பிளாக் செயின் என்ற தொழில்நுட்பம் இந்த தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கரன்சிகள் உருவாக்கப்படுகின்றன. மற்றொரு பிரிவான மத்திய வங்கி கரன்சியில் பணத்தை அந்த நாட்டின் மத்திய வங்கியே உருவாக்குகிறது. இதுதான் கிரிப்டோ விற்கும் மத்தியவாங்கி கரன்சிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு.



 


Similar News