அமெரிக்க போர்க்கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக வருவது எதனால் தெரியுமா?

சென்னை அருகே காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு அமெரிக்க போர்க் கப்பல் வருகைக்காக 11 நாட்கள் நிறுத்தப்பட்டு இருக்கும்.

Update: 2022-08-08 10:30 GMT

சென்னை அருகே காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்துக்கு பழுதுபார்க்கும் பணிக்காக அமெரிக்க போர்க்கப்பல் வந்துள்ளது. இந்த கப்பல் 11 நாட்கள் இங்கேயே முகாமிட்டிருக்கும்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் 'எல் அண்டு டி' நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது.'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்த கப்பல் கட்டும் தளத்தில் இருந்து இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு அதி நவீன வசதிகளை உள்ளடக்கிய ரோந்து கப்பல்கள் தயாரித்த வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று நவீன காலத்திற்கு ஏற்ப கப்பல்கள் குவிக்கப்பட்டு புனரமைப்பு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்தியா அமெரிக்கா இடையேயான நட்புறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'யூ.எஸ்.என்.எஸ் சார்லஸ் டிரியூ'என்ற போர்க்கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக முதல் முறையாக காட்டுப்பள்ளி 'எல் அண்டு டி' நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்துக்கு நேற்று வந்தது. அமெரிக்க போர்க்கப்பலை பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அஜய்குமார் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 'யூ.எஸ்.என்.எஸ் சார்லஸ் டிரியூ' என்ற கப்பல் முதல் முறையாக இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் வந்திருக்கிறது.

அமெரிக்க கப்பலின் வருகை என்பதுஇந்தியா அமெரிக்கா இடையேயான நெருங்கிய உறவு வளர்ந்து வருவதையும் விரிவடைவதையும் காட்டுகிறது.

ராணுவ தளவாட பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் கப்பல் துறை வளர்ச்சி அடைந்தது நம்முடைய முதலாவது விமானம் தாங்கி போர்க் கப்பலான விக்கிராந்த் சிறந்த உதாரணம் என கூறினார்.

'யு.எஸ்.என்.எஸ் சார் லஸ் டிரியூ' அமெரிக்க கப்பலின் முதன்மை கேப்டன் வில்லியம் ஹார்ட் மேன் ஆவார்இந்தக் கப்பல் காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 11 நாட்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கப்பலில் பல்வேறு பழுதுபார்ப்பு பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




 


Similar News