முக கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்த போலீஸார்!

முக கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்த போலீஸார்!

Update: 2020-04-17 14:15 GMT

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அதிக அளவில் சாலைகளில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வெளியே வரும் பொது மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டுமென்றும், முகக் கவசம் அணியாமல் வருபவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.


இந்நிலையில் புதுச்சேரி முக்கிய சிக்னல்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது பைக்கில் இரண்டு பேர் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டுமென அறிவுரை கூறினர். அப்படி இல்லையென்றால் முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்தபடி முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தும் ஒரு சிலரை எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.

Similar News