வைரல் 'காவி' திருவள்ளுவர் படத்தை உருவாக்கியது யார்? சுவாரஸ்ய தகவல்!
வைரல் 'காவி' திருவள்ளுவர் படத்தை உருவாக்கியது யார்? சுவாரஸ்ய தகவல்!
கடந்த மூன்று நாட்களாக வைரலாகி வரும் காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் படத்தை வரைந்தது யார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இன்று ஆயிரக்கணக்கான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இந்த படம் பதியப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த படத்தை தங்கள் முகப்படமாக(Profile Picture) வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இதை உருவாக்கியது யார், எந்த பின்னணியில் என்ற ஆய்வுக்கு சென்றோம்.
ராஜா என்பவர் இந்த படத்தை வரைந்துள்ளார். Modifier Raja என்ற பெயரில் இவர் முகநூலில் இயங்கி வருகிறார். ஏன் இந்த படத்தை உருவாக்கினேன் என்பது குறித்து அவர் தெரிவித்து இருப்பது பின்வருமாறு:
முதலில், நடந்தது என்ன ? அந்த படத்தை ஏன் உருவாக்கினேன் ?
என் நண்பர் @ChandrasekarN ஒரு திருவள்ளுவர் படத்தை எனக்கு அனுப்பி இதில் திருவள்ளுவரை ருத்ராட்சம் திலகம் அணிந்து கம்பீரமான துறவி (முனிவர்) போல வடிவமைத்து தரும்படி கேட்டுக்கொண்டார். ( அவருடைய Facebook Profile Picture ஆக பயன்படுத்த)
அதன் அடிப்படையில் தான் நான் இந்த படத்தை வடிவமைத்தேன் .. ஆனால் வடிவமைப்பதற்கு முன் " திருவள்ளுவர் ருத்ராட்சம் திலகங்கள் அணிந்திருப்பது போன்ற புகைப்பட ஆதாரங்கள் தரவுகள் உள்ளதா என் வலைதளங்களில் தேடினேன் "
எனக்கு தெரியும் {வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்த (நீங்கள் கூறிக்கொள்வது போல)} அவர் ஒரு இந்து (சனாதன தர்ம) துறவி என்று , இருந்தாலும் உறுபடுத்திக்கொள்ள தேடினேன் .. பல புத்தகங்களின் அட்டைப் படங்கள் கிடைத்தது , அதன்பிறகு தான் இந்த புகைப்படத்தை வடிவமைத்தேன்.