விளையும் நச்சுப்பயிரை முளையிலேயே கிள்ளி எறிகிறது இந்தியா.. உலக சுகாதார நிறுவனம் பாராட்டு..

விளையும் நச்சுப்பயிரை முளையிலேயே கிள்ளி எறிகிறது இந்தியா.. உலக சுகாதார நிறுவனம் பாராட்டு..

Update: 2020-04-04 03:19 GMT

கொரோனா வைரஸ் விவகாரத்தில் தொடக்க நிலையிலேயே அதை கிள்ளி எறியாத நாடுகள் வேகமான வைரஸ் பரவுதலுக்கு உள்ளாகி மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகிவிடும், எனவே குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கும் போதே ஊரடங்கு போன்றவற்றை சிறந்த முறையில் அமல்படுத்தினால்தான் சிறந்த தீர்வு கிடைக்கும்.

இந்த வகையில் மிக நெருக்கமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஊரடங்கு மூலம் கோடிக்கணக்கான மக்களை தனிமைப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. இது ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட முடிவு என உலக சுகாதார சிறப்பு பிரதிநிதி டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.

அதே சமயம் கொரோனா வைரஸ் நோய் திடீரென மறைந்து விடும் என நம்புவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என கூறிய அவர் தற்போதுள்ள நடைமுறைகளை மேலும் சிறிது காலத்துக்கு பின்பற்ற வேண்டியது இருக்கலாம் என கூறியுள்ளார்.

Similar News