காஷ்மீர் ஏன் பிரிக்கப்பட்டது? - அமித்ஷா விளக்கம்!!

காஷ்மீர் ஏன் பிரிக்கப்பட்டது? - அமித்ஷா விளக்கம்!!

Update: 2019-08-05 07:13 GMT


காஷ்மீர் தொடர்பாக 3 முக்கிய அறிவிப்புக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் இன்று  வெளியிட்டார்.


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார்.


*ஜம்மு காஷ்மீர் இனி மாநிலமாக இருக்காது. அதற்கு பதில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.


*லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.


காஷ்மீர் பிரிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்து அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.





இதோடர்பாக அமித்ஷா வெளியிட்டுள்ள விளக்க குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


மக்கள் தொகை குறைந்த, செல்வதற்கு கடினமான பெரிய பகுதி லடாக் என்பதால் அதை கையாள்வதும் கடினமானது. யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்ட கால கோரிக்கை. மக்களின் விருப்பத்தையும், நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்றும் விதமாக லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட உள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காகவும், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் ஜம்மு -  காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக்கப்பட உள்ளது. சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீர் செயல்படும். 


இவ்வாறு அமித்ஷா அளித்துள்ள விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar News