இந்தியா ஜி20 தலைமை பொறுப்பு வகிக்கும் காலத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பேன்- ஜோ பைடன் உறுதி

இந்தியா ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் காலத்தில் என் நண்பர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று ஜோ பைடன் கூறினார்.

Update: 2022-12-03 06:45 GMT

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உட்பட 20 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அடங்கிய      ஜி- 20 அமைப்பு இயங்கி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. நேற்று முன்தின முதல் தலைமை பொறுப்பை வகித்து வருகிறது. இதையொட்டி ஓராண்டுக்கு பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய கட்டிடங்கள் மின்னொலியில் ஜொலிக்கின்றன. ஜி - 20 அடையாள சின்னமும் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ-பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா அமெரிக்காவின் வலிமையான கூட்டாளி. இந்தியா ஜி- 20 தலைமை பொறுப்பை வகிக்கும் காலத்தில் என் நண்பர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். மேலும் பருவநிலை, எரிசக்தி மற்றும் உணவு பிரச்சினைகள் போன்ற கூட்டு சவால்களை கையாள்வதுடன், நிலையான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இரு நாடுகளும் பாடுபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





 


Similar News