திருப்பதி நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்கப்படுமா? தேவஸ்தானத்தின் முடிவு என்ன?

திருப்பதியில் நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-28 10:30 GMT

திருப்பதியில் நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான அனுமதிகள் என நிறையவே நடைமுறை சிக்கல்கள் இருந்த காரணத்தினால் ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் குறைவாகவே இருந்தது. தற்போது மீண்டும் கூட்டம் அதிகமாகி வருகிறது தினமும் குறைந்தபட்சம் 60 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் சென்று தரிசன டிக்கெட் பெற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தனர், நடைபாதையில் வரும் பக்தர்களுக்காக தரிசனத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்பொழுது தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருவதால் அனைவரும் ஒரே நடைமுறைப்படி ஏழுமலையானை தரிசிக்கும்படி நிலை தற்பொழுது இருந்து வருகிறது.

இந்நிலையில் நீண்ட தூரத்திலிருந்து நடைபாதை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு சிரமம் அடைந்து வருகின்றனர், எனவே நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய சிறப்பு டோக்கன்கள் வழங்கியதை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும், நடைபாதை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை முன்னுரிமை வழங்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் இதனை கவனிக்குமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


திருப்பதியில் நேற்று 75,078 பக்தர்கள் தரிசனம் செய்தனர், 34,674 பேர் முடி காணிக்கை செலுத்தினர், மேலும் 4.34 கோடி ரூபாய் காணிக்கை உண்டியல் வசூல் ஆனது.

Similar News