ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு ஜெயில்! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!!

ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு ஜெயில்! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!!

Update: 2019-08-03 06:46 GMT


ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லிம் பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் குண்டு வைத்து கொத்து கொத்தாக மக்களை கொன்று ஈவு இரக்கமற்ற நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இவர்கள் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக இவர்களது ஆதரவாளர்கள் பல்வேறு நாடுகளிலும் உள்ள முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்த்து வருகிறார்கள். நமது நாட்டிலும் சில முஸ்லிம்கள் இந்த மோசமான வேலைக்கு துணைபோய் வருகின்றனர்.





கேரளாவை சேர்ந்த பலரும் இதேப்போல மூளை சலவை செய்யப்பட்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


குறிப்பாக காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிக அளவு ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து உள்ளனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான ஐ.என்.ஏ. அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ப்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.


மேலும் கேரளாவில் இருந்து பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தவர்கள் பற்றியும் பட்டியல் தயாரித்து அவர்களை தேடி வருகிறார்கள். ஐ.என்.ஏ. அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவல்படி இதுவரை 98-க்கும் மேற்பட்ட கேரளாவை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் பயங்கவாத அமைப்பில் சேர்ந்துள்ள தகவல் கிடைத்து உள்ளது.





இவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டதில் 38 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். கேரளாவில் ஐ.என்.ஏ. அதிகாரிகள் இது தொடர்பாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் பலரும் தொடர்ந்து கைதாகி வருகிறார்கள்.


காசர்கோடு பகுதியை சேர்ந்த 15 முஸ்லிம் இளைஞர்கள் கேரளாவை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானுக்கு சென்று அங்கு ஐ.எஸ்.ஐ.எஜ் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர். 


இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஐ.என்.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்தில் கேரள வாலிபர்களை இணைத்த யாஸ்மின் முகம்மது சாகித் என்ற பெண்ணை கைது செய்தனர். 


இவர் கேரளாவில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.


இதுதொடர்பான வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து யாஸ்மின் முகம்மது சாகித் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்தது.


இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 


யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு, கேரள ஐகோர்ட் வழங்கிய 3 ஆண்டு தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பு வழங்கியுள்ளது.


Similar News