#PLF2019: எழுத்தாளர்கள் மாநாட்டில் திருப்பு முனையை உண்டாக்கும் 'The Pondy Lit Fest' - புதுவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி தொடங்கி வைக்கும் நிகழ்வு.!

#PLF2019: எழுத்தாளர்கள் மாநாட்டில் திருப்பு முனையை உண்டாக்கும் 'The Pondy Lit Fest' - புதுவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி தொடங்கி வைக்கும் நிகழ்வு.!

Update: 2019-09-10 08:05 GMT

புதுவையில் வருகின்ற செப்டம்பர் 27ந் தேதி நடைபெறும் The Pondy Lit Fest என்ற எழுத்தாளர்கள் மாநாட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இவ்விழா நடைபெற உள்ளது.


இது குறித்து அலையன்ஸ் பிரான்சிஸ், தலைவர் லலித்வர்மா, இன்டலோகோ இயக்குனர் பார்த்தா ஹரிஹரன் ஆகியோர் தகவல் வெளியிட்டுள்ளனர். புதுவை எழுத்தாளர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வகையில் 'The Pondy Lit Fest' என்ற தலைப்பில் 3 நாட்கள் மாநாடு நடத்த உள்ளனர். இந்த மாநாடு செப்டம்பர் 27-ந் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை பாண்டிச்சேரியில் உள்ள ஷென்பாகா கன்வென்ஷன் சென்டரில் தொடங்குகிறது. இதற்கு நுழைவு கட்டணம் இல்லை. ஆனால் அளவான இருக்கைகளே உள்ளன.


மாநாட்டில் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 80-க்கும் மேற்பட்ட அறிவியல், வரலாறு, கலை, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு நூலாசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். இதில் புதுவையில் இருந்தும் பல எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர்.


இந்த வருடம் கஞ்சன் குப்தா மற்றும் ஆனந்த் ரங்கநாதன் விழாவை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்ல உள்ளனர். கஞ்சன் குப்தா இந்திய அளவில் உற்றுநோக்கப்படும் பத்திரிக்கையாளர்களில் ஒருவர், வாஜ்பய் பிரதமராக இருந்த பொழுது, அவருக்கு கீழ் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஆனந்த் ரங்கநாதன் JNU பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஏராளமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.


இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. அரசியலுக்கு தொடர்பில்லை. எழுத்தாளர்கள், இலக்கிய கலாச்சாரத்துக்காகவே இந்த மாநாடு நடக்கிறது. இந்த விழாவில் ஊடக பங்குதாரராக ரிபப்ளிக் இணைந்துள்ளது. சமூக வலைதள பங்குதாரர்களாக கதிர் செய்தி, jankibaat, myind , swarajyamag , opindia, tfipost, வலம் ஆகியவை இணைத்துள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்க http://pondylitfest.com/index.php என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.


Similar News