ஷகீல் பாக்கில் கலக்கப்போகிறார் யோகி ஆதித்யநாத்: மக்களை திரட்டி மாபெரும் பேரணிகள் நடத்துவதில் NO.1 அவர்தானாம்! பத்திரிகைகள் தகவல்!

ஷகீல் பாக்கில் கலக்கப்போகிறார் யோகி ஆதித்யநாத்: மக்களை திரட்டி மாபெரும் பேரணிகள் நடத்துவதில் NO.1 அவர்தானாம்! பத்திரிகைகள் தகவல்!

Update: 2020-01-31 05:04 GMT

இந்தியாவுக்கு எதிரான சக்திகள் இந்துக்களைப் பிரிக்கும் பணிகளுக்காக ஏராளமான நிதி அளித்து CAA – வுக்கு எதிர்ப்பு தெரிக்கும் சிறுபான்மை அமைப்புகளுக்கு பின்னால் இருந்து உதவி வருகின்றனர். CAA- வை வைத்தே மோடி ஆட்சிக்கு மிரட்டல் தர சமீபத்தில் ஏராளமான கோடிகள் செலவில் ஷகீல் பாகில் மிகப்பெரிய பேரணி நடத்தினர். இந்த பேரணியின் முக்கிய நோக்கம் டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதை தடுப்பதற்குத்தான்.


ஆனால் பேரணி நடத்திய அதே இடத்திலேயே சில நாட்களுக்கு முன்பாக அமித்ஷா மிக பிரம்மாண்டமான பேரணியை நடத்திக் காட்டி எதிர்ப்பாளர்களை வாயடைக்க வைத்தார். ஆனாலும் பத்திரிகைகள் அமித்ஷாவின் பேரணி, எதிர்ப்பாளர்கள் நடத்திய பேரணிக்கு சமமாக த்தான் இருந்தது, ஒரு மாபெரும் சக்தி படைத்த பாஜகவின் செல்வாக்கு இவ்வளவுதானா என கேள்வி கேட்டிருந்தன.


இந்த நிலையில் டெல்லி தேர்தலை முன்னிட்டும், CAA –எதிர்ப்பாளர்களுக்கு கிலி ஏற்படுத்தும் வகையிலும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் எட்டு பேரணிகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலம் நடத்த அகில இந்திய தலைமை திட்டமிட்டுள்ளது.


இதற்காக ஒரு வார விடுமுறையில் யோகி ஆதித்யநாத் டெல்லியில் முகாமிடுவதாக உத்தரபிரதேச தலைமை செயலக வட்டாரங்களும் உறுதி செய்தன.


இதில் முதல் பேரணியாக ஷகீல் பாக்கில் CAA – வுக்கு ஆதரவான இந்துக்கள் சக்தியை வரும் 2- ந்தேதி அவர் காட்டவுள்ளார். இந்த மாபெரும் பேரணிக்காக உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் இந்தி பேசும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் டெல்லி மாநில கிராமப்பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான தொண்டர்கள் இப்போதே புறப்பட்டு விட்டனர் என செய்திகள் கூறுகின்றன.


மேலும் பாஜகவில் மோடி, அமித்ஷா இவர்களுக்கு அடுத்த நிலையில் மாபெரும் மக்கள் சக்தியை திரட்டும் தலைவர் இவர்தான் என்றாலும் அகில இந்திய பொறுப்புகள், அதிகாரம் எதுவும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இலட்சக்கணக்கில் கூட்டம் சேர்க்கும் வலிமை பெற்றவராக யோகிஆதித்யநாத் உள்ளார் எனவும் பத்திரிகைகள் கூறுகின்றன., மக்களவை தேர்தலின் போது மோடி பங்கேற்ற வாரணாசி பேரணி வரலாற்றில் மறக்க முடியாத பேரணி என்றும் கிட்டத்தட்ட 10 இலட்சம் தொண்டர்கள் பங்கேற்ற பேரணி அது என்றும் 2 நாட்களில் அந்த பேரணிக்கான ஏற்பாடுகளை செய்து ஆதித்யநாத் அசத்திவிட்டதாகவும் கூறின.  


உதாரணமாக தேர்தல் நேரத்தில் பீகார், மத்திய பிரதேசம் மற்றும் இந்தி பேசும் அனைத்து மாநிலங்களிலும் அவர் பங்கேற்கும் பேரணிகள், பொது கூட்டங்கள் அவர் வளர்ந்து கொண்டிருக்கும் மாபெரும் சக்தி என கருதுபவையாக உள்ளன என பத்திரிகைகள் ஆங்கில பத்திரிகைகள் கூட வருணித்துள்ளன.


SOURCE:- FIRST POST


Similar News