வி.பி.சிங் கொண்டு வந்த சட்டத்தை குப்பையில் வீசினார், யோகி ஆதித்தியநாத்!!

வி.பி.சிங் கொண்டு வந்த சட்டத்தை குப்பையில் வீசினார், யோகி ஆதித்தியநாத்!!

Update: 2019-09-14 12:09 GMT


1981-ஆம் ஆண்டு வி.பி.சிங், உத்தரபிரதேச மாநில முதல்வராக இருந்தபோது, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான வரியை, மக்கள் வரிப் பணத்திலிருந்து செலுத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை குப்பையில் வீசிய முதல்வர் யோகி ஆதித்தியநாத், அமைச்சர்கள் மற்றும் முதல்வர் தங்ளது வருமான வரியை அவர்களே செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


1981-ஆம் ஆண்டு, உத்தரபிரதேச மாநில முதல்வராக வி.பி.சிங் இருந்தார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டு வந்தார்.


அந்த சட்டத்தின்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான வரியை மாநில அரசே, மக்களின் வரிப் பணத்திலிருந்து செலுத்தும். சுமார் 37 ஆண்டுகள் இந்த சட்டம் அமலில் இருந்துள்ளது.


இந்நிலையில் இந்த சட்டத்தை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் ரத்து செய்து உத்தரவிட்டு்ள்ளார்.


இதுதொடர்பாக மாநில நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், இனிமேல், அவர்களின் வருமான வரியை, அவர்களே செலுத்துவார்கள். ஏற்கனவே இருந்த முறையை ரத்து செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Similar News