“எனக்கு ஓட்டு போடாததால் உனக்கு வேலை கிடையாது” - கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சுயரூபம்!

“எனக்கு ஓட்டு போடாததால் உனக்கு வேலை கிடையாது” - கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சுயரூபம்!

Update: 2019-06-26 10:47 GMT


கிராம தரிசன நிகழ்ச்சி (மக்கள் குறைதீர் முகாம்) என்ற நாடகத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த வாரம் தொடங்கினார். 


இதில் வேடிக்கை என்னவென்றால், அரசுப் பேருந்தில்தான் குமாரசாமி சண்டரகி கிராமத்து வந்தார். அரசுப் பள்ளியில்தான் தங்கினார். பாயில்தான் படுத்தார். ஆனாலும், கிராம தரிசனத்துக்கு ஆன செலவு ரூ.1.25 கோடி என்று பில் போட்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவும் குமாரசாமிக்காக செலவிடப்பட்ட தொகையில்லையாம். அவரைப் பார்க்க வந்த பொதுமக்களின் வசதிக்காக செலவு செய்யப்பட்டதாம்.


அதாவது ரூ.25 லட்சம், யாத்கிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தர்கி பகுதிக்கு வந்த பொதுமக்களின் வசதிக்காக செலவிடப்பட்டுள்ளதாம். ரூ.25 லட்சம் பொதுமக்களுக்கான தற்காலிக அலுவலகம் அமைக்கவும், மனுக்களைப் பெற மையங்கள் அமைக்கவும் செலவிடப்பட்டுள்ளதாம்.


பொதுமக்கள் 25 ஆயிரம் பேருக்கு சமையல் செய்து வழங்க  ரூ.15 ஆயிரம்தான் செலவாகியுள்ளது. ஆனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகளுக்கு இரவு உணவு, காலை உணவு போன்றவற்றுக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவாகியுள்ளது. மேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.50 லட்சம் செலவானதாகவும் கணக்கு எழுதப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் தனது 2 - வது நாள் கிராம தரிசன நாடகத்தை அரங்கேற்ற, குமாரசாமி அமைச்சர்களுடன் கெரகுட்டா புறப்பட்டு சென்றார். அவர்கள் ராய்சூர் பகுதியில் சென்றபோது, எர்மாரஸ் அனல்மின் நிலை பணியாளர்கள் அவர்கள் சென்ற பஸ்சை வழிமறித்து போராட்டம் நடத்தினர். 


நிரந்தர பணி வழங்கக்கோரி அவர்கள் சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், முதல்வரின் வாகனத்திற்கு வழிவிட அவர்கள் மறுத்தனர்.


பஸ்சுக்குள் வெகுநேரமாக அமர்ந்திருந்த முதல்வர் குமாரசாமி, கோபமடைந்தார். பஸ்சில் ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு, “நீங்கள் எனக்கா ஓட்டு போட்டீர்கள்? எனக்கு ஓட்டு போடாததால் வேலை கிடையாது. மோடிக்குத்தானே ஓட்டு போட்டீர்கள். போய் மோடியிடமே கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். வழிவிடுங்கள்” என கோபமாக கத்தினார். 


Similar News