எதுவுமே தெரியாம கலைமாமணி விருதை அப்படியே தூக்கி கொடுக்கிறீங்களே - நீதிமன்றம் வேதனை

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-18 12:33 GMT

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

2019-20ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை திரும்ப பெற கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் தலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பியதோடு விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டதாக கூறினர்.

மேலும் கலை துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விருது தற்பொழுது இரண்டு படங்களில் நடித்து விட்டால் அவர்களுக்கு விருது வழங்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் இதை தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Source - Polimer News

Similar News