சொந்தக் கட்சியினரே தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு - கிறிஸ்தவ மத மாற்றத்தைப் பற்றி பேசியதாலா? #YSRCP #Missionary #Conversion #Corruption

சொந்தக் கட்சியினரே தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு - கிறிஸ்தவ மத மாற்றத்தைப் பற்றி பேசியதாலா? #YSRCP #Missionary #Conversion #Corruption

Update: 2020-07-04 12:10 GMT

ஆந்திராவில் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடக்கிறது என்று நேரலையில் உண்மையைப் போட்டுடைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி ரகுராம கிருஷ்ண ராஜூவைத் தகுதி நீக்கம் செய்யுமாறு அவரது கட்சியினரே மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சக கட்சிக்காரர்களிடமும் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டியிடமும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தனது கட்சிக்கு எதிராக செயலாற்றிய தாகவும் குற்றம் சாட்டி ஆந்திர மாநிலம் நரசபுரம் தொகுதியின் எம்பியாக உள்ள ராமகிருஷ்ண ராஜுவை தகுதி நீக்கம் செய்யுமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் விஜய்சாய் ரெட்டி தலைமையிலான எம்பிக்கள் குழு மக்களவை சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

"தனது குறைகளை கட்சிப் பொறுப்பாளர்களிடம் கூறி கட்சிக்குள் ஆலோசிக்காமல் பொது வெளியில் கூறி கட்சி விதிகளை மீறி விட்டார். கட்சி விதிகளை மீறியதாலும் பேச்சு சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாலும் கட்சித் தாவல் சட்டம் இந்த விஷயத்திற்கு பொருந்தும். எனவே இந்தச் சட்டத்தின் பிரிவு 10ன் கீழ் ராஜூவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்று அந்தக் குழு அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சாதி அரசியல் மற்றும் ஊழலில் ஈடுபடுவதாக ராஜு சில நாட்களுக்கு முன் தனது கட்சியை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. அவர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் துறை செயலர் அஜய்‌ நல்லா ஆகியோரைச் சந்தித்ததோடு பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து ஒரு‌ பாடலையும் வெளியிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்த கட்சியினரிடம் இருந்தே கொலை மிரட்டல்கள் வருவதாகவும் உள்ளூர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய அரசிடம் பாதுகாப்பு கோரி விண்ணப்பம் வைத்துள்ளதாகவும் கூறினார். ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பொது வெளியிலேயே தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறிய அவர் மக்களவை சபாநாயகரிடம் தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியுள்ளதாக தெரிவித்தார். இவர் சில நாட்களுக்கு முன் டைம்ஸ்நவ் தொலைக்காட்சி ‌விவாத நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலத்தில் பணம் கொடுத்து மக்கள் மதம் மாற்றப்படுகிறார்கள் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருப்பதை விட உண்மை நிலவரப்படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் வெளிப்படையாகக் கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


நன்றி : opindia

Similar News