அதிகப்பிரசங்கிதனமான பேச்சு - மன்சூர் அலிகான் முன் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Update: 2021-04-22 06:45 GMT

கொரோனா தடுப்பூசி குறித்தும், நடிகர் விவேக் மரணம் குறித்தும் அளவுக்கு மீறி அதிகமாக பேசி அவதூறு கருத்துக்களை பரப்பிய காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாரடைப்பு காரணமாக சுயநினைவின்றி, சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இதயத்தில் 100 சதவீத அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அதற்காக ஆஞ்சியோ அறுவைசிகிச்சையும் உடனடியாக செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து 17'ம் தேதி காலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் உயிரிழந்த தகவல் வெளியாகி தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு முன் நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி தொடர்பாக சில உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். எனவே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர்அலிகான் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படது. தற்போது கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், நடிகர் மன்சூரலிகான் மீது வடபழனி காவல் துறையினரிடம் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி, கடந்த 19 ஆம் தேதி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நேற்று இவருடைய ஜாமீன் மனு, விசாரணைக்கு வந்தது அப்பொழுது இவரது முன் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Similar News