மன்னார்குடியில் கருத்துகணிப்புகளை வைத்து "வருங்கால அமைச்சர்" என போஸ்டர் அடித்துக்கொண்ட தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா!

Update: 2021-05-02 03:00 GMT

மன்னார்குடியில் கடந்த பத்தாண்டுகளாக எம்.எல்.ஏ'வாக இருக்கும் டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா தி.மு.க அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றத்திற்கு வாழ்த்துக்கள் என போஸ்டர் காணப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று தான் வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு துவங்கியது. அதற்குள் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் இரு தினங்களுக்கு முன் வெளிவந்த 'எக்ஸிட் போல்' கருத்துக்கணிப்புகளை வைத்து தி.மு.க ஆட்சிதான் இனி என நினைத்து போஸ்டர் அடித்து ஒட்டிகொண்ட ஒரே வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாதான்.

"அதற்குள் என்னய்யா அவரசரம்" என அங்குள்ள சீனியர் உடன்பிறப்புகளே புலம்பி வருகின்றனர்.

Similar News