ஸ்டாலின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? முக்கிய வாக்குறுதிகள் என்னனென்ன? ஓர் பார்வை!

Update: 2021-05-03 05:30 GMT

இன்றுடன் ஆளும் அ.தி.மு.க அரசு முடிவுக்கு வருகிறது, மாநிலத்தில் தி.மு.க புதிய அரசாக விரைவில் பொறுப்பேற்கிறது. அனேகமாக இந்த வார இறுதிக்குள் பதவி ஏற்பு விழா நடைபெற்று அமைச்சரவை அமைக்கப்படும் எனவும் தகவல்கள் வருகின்றன. இது தி.மு.க'விற்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்திருக்கும் வாய்ப்பாகும் இதுவரை மத்தியிலும், மாநிலத்திலும் எதிர்கட்சியாக இருந்து குறைகளை சொல்லி பழக்கப்பட்ட தி.மு.க'விற்கு, வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்திருக்கும் தி.மு.க'விற்கு கூறியபடியே நிறைவேற்ற வேண்டியவை நிறைய உள்ளது. அப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த தி.மு.க அரசு போடும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்பதே தற்பொழுதைய மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அப்படி தி.மு.க மக்களிடத்தில் கூறிய முக்கிய வாக்குறுதிகளை பாரப்போம்.

- குடும்ப தலைவியருக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை,

- நீட் தேர்வை ரத்து செய்ய திட்டம்,

- 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி,

- மகளிர் சுய உதவிக்குழுவின் கடன் தள்ளுபடி,

- கல்விக்கடன் தள்ளுபடி,

- சிலிண்டருக்கு ரூ.100 மானியம்,

- பெட்ரோல் ரூ.5 விலை குறைப்பு, டீசல் - ரூ.4 விலை குறைப்பு,

- ஆலயப் புரணமைப்புக்கு 1000 கோடி,

- தமிழக வேலை வாய்ப்புகளில் 75% தமிழருக்கே என்ற ஆணை,

- மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி,

- மாணவிகளுக்கு இலவச நாப்கின்

என தி.மு.க குடுத்த வாக்குறுதிகளில் இவைகள் முக்கியமான வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதி முதல் கையெழுத்தாக இருக்கும் என்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுவரை குறை சொல்லி பழக்கப்பட்ட தி.மு.க தற்பொழுது முதன் முறையாக ஸ்டாலின் தலைமையில் குறையை நிவர்த்தி செய்யும் பொறுப்பில் அமர்ந்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நிலை என்று?

Similar News