பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட ஸ்டாலின்!

Update: 2021-05-03 06:00 GMT

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. அதன் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அநேகமாக இந்த வார இறுதிக்குள் பதவி ஏற்பு மற்றும் அமைச்சரவை ஆகியவை முடிவு செய்யப்படும் என தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் பாரதப்பிரதமர் திரு.நரேந்நிர மோடி அவர்களை சந்திக்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவலை தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அதன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து சாமர்த்தியமாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மிகச்சரியான நேரத்தில் வாங்கி பயன்படுத்திகொண்டிருந்தார்.

இனி தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் தி.மு.க'வே அமரும் என்ற நிலையில் ஸ்டாலினும் அதேபோல் காழ்ப்புணர்ச்சி இன்றி இணக்கமான போக்கினை கடைபிடித்து தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் இருந்து வாங்க வேண்டும் என்பதே பெருவாரியான மக்களின் விருப்பமாக உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க தி.மு.க தலைவரும், தமிழக முதல்வராக பதவியேற்க போகும் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

அதேபோல் நேற்று பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை ஸ்டாலினுக்கு தெரிவித்திருந்தார், ஸ்டாலினும் பதிலுக்கு மக்களின் நலனிற்காக இணக்கமான அரசாக இருப்போம் என உறுதியளித்தார். இந்த நிலையில் பிரதமரை ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டுள்ளது குறிப்பிடதகுந்ததாக கருதப்படுகிறது.

Similar News