திரைத்துறையினரின் பாராட்டு விழாக்கள் ஆரம்பம் - ஸ்டாலினுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பாராட்டு விழா!

Update: 2021-05-04 05:15 GMT

கடந்த 2006'ம் ஆண்டிலிருந்து 2011'ம் ஆண்டு வரை தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக பதவி வகித்தார். இந்த காலகட்டங்களில் "பாசத்தலைவனுக்கு பாரட்டு விழா", "ஆட்சி நாயகனுக்கு பராட்டு விழா", "கலைஞருக்கு பாராட்டு விழா" என தமிழ்திரையுலகம் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி'க்கு பாராட்டு விழாக்களை திகட்ட திகட்ட எடுத்தன. அடுத்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க எதிர்கட்சி வரிசையில் கூட அமரமுடியாமல் போனதற்கு இந்த பாராட்டு விழாக்களும் ஒரு காரணமாகும் அளவிற்கு இருந்தது இந்த பாராட்டு விழா அலப்பறைகள்.

தற்பொழது 10 ஆண்டுகள் கழித்து தி.மு.க ஆட்சியமைக்கின்றது. கருணாநிதி அவர்களின் மகன் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்ரமணியம், 'தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கருணாநிதி வெற்றி பெற்ற பின்னர் திரைத்துறை சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுவார். அனைத்து சங்கமும் இணைந்து தி.மு.க தலைவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம். திரைத்துறைக்கு பல சலுகைகளை தி.மு.க வழங்கி உள்ளது.

திரையரங்குகள் ஒரு ஆண்டாக மூடப்பட்டுள்ளது. சொத்து வரி, தொழில்வரி, மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். 8 சதவீத எல்.பி.டி வரியை தள்ளுபடி செய்யவேண்டும். அதனால் டிக்கெட் விலை 15 வரை குறையும்.

உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையை சார்ந்தவர். அதன் சிரமங்களை உணர்ந்தவர். தி.மு.க ஆட்சியில் எங்களுக்கு விடிவு காலம் வரும் என நம்புகிறோம். கருணாநிதி திரைத்துறையினரிடம் மென்மையான போக்கை கடைபிடித்தார். அதனையே தி.மு.க தலைவர் ஸ்டாலினும் பின்பற்றுவார் என நம்புகிறோம்" என தெரிவித்தார்.

Similar News