கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வன்முறை - தி.மு.க கொடியுடன் ஆட்கள் அத்துமீறி நுழைவு!

Update: 2021-05-05 05:15 GMT

"ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு" என தமிழகம் முழுவதும் கோடிகளில் செலவு செய்து விளம்பரப்படுத்தி வாக்குகளை பெற்று தற்பொழுது தி.மு.க ஆட்சியை பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து வரும் 7'ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஆனால் களத்திலோ தி.மு.க'வினர் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத கோபத்தை மக்கள் மத்தியில் காண்பித்து வருகின்றனர். நேற்று சென்னை ஜெ.ஜெ நகரில் 'அம்மா உணவகம்' தி.மு.க'வினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளியோர் சாப்பிடும் அந்த உணவகத்தை தி.மு.க'வினர் அடித்து உடைத்தது பற்றி பல்வேறு கண்டன குரல்கள் எழுந்ததை தொடர்ந்து அந்த இருவர் மீதும் தி.மு.க நடவடிக்கை எடுத்தது.

தற்பொழுது மேலும் ஒரு தி.மு.க'வின் அராஜக செயல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினு மேல் நின்று தி.மு.க'வினர் தி.மு.க கொடியை பிடித்தபடி அந்த கட்டிடத்தில் இனி தி.மு.க கொடிதான் பறக்க வேண்டும் என கோஷமிட்டதாக புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

ஏற்கனவே தி.மு.க என்றால் அராஜகம் என மக்களால் பேசப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் மூலம் தி.மு.க நிரூபித்து வருவது மக்களிடையே வெறுப்பை விதைத்து வருகிறது.

Similar News