சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரில் உலா வரும் போலியான வாட்ஸ்அப் மெசேஜ்!

Update: 2021-05-11 09:45 GMT

கடந்த 3 தினங்களாக வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று உலா வருகிறது. அது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மொபைல் மற்றும் வீட்டு தொலைபேசி எண் போன்ற இன்ற பிற விவரங்களை குறிப்பிட்டு உங்களுக்கு உதவி தேவை என்றால் கூப்பிடவும் உடனே உதவி கிடைக்கும் என இது பற்றி ஒரு தனியார் பத்திரிக்கை விசாரித்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது கடந்த 3 தினங்களாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அறிவிப்பு என்று கூறி, வாட்ஸ் அப்பில் அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள், இணையதள முகவரி ஆகியவை பகிரப்பட்டு, மருத்துவமனைகள் தொடர்பான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வாட்ஸ் அப் செய்யுங்கள், உங்களுக்கு அழைப்பு வரும் என்ற தகவலோடு பகிரப்படுகிறது.

இதுதான் அந்த வாட்ஸ்அப் மெசேஜ்


இந்த வாட்ஸ் அப் தகவல் கிடைத்ததும், இது உண்மையா அல்லது வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வதந்தியா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள அதற்கு நேரடியாக அந்த தனியார் பத்திரிக்கை சார்பில் மெசேஜ் அனுப்பிப் பார்க்கப்பட்டது.

அதாவது, "சமீபத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயன்றபோது, ஆஸ்துமா பிரச்னை இருப்பதால் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த வேண்டாமென்று ஒருவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடைய நிலையைக் குறிப்பிட்டு தடுப்பூசி விஷயத்தில் உதவி தேவை" என குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பப்பட்டது.

ஆனால் இதுவரை எவ்வித பதிலோ அழைப்போ வரவில்லை எனவும், அந்த அலைபேசி எண் மற்றும் மருத்துவம் தொடர்பான உதவிகளுக்காக குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பார்த்தால் அதற்கும் தொடர்பு கிடைக்கவில்லை எனவும் அந்த பத்திரிக்கை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து இந்த தகவலை உறுதிசெய்ய சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளரிடம் பேசியதற்கு, "அமைச்சரின் எண் என பகிரப்படும் அந்த எண் உண்மைதான். ஆனால், அதற்கு தகவல் அனுப்பி நேரடியாக உதவி கேட்கலாம் என எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை.

அது தவறானது. அதற்கு நிறைய கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை ஒருங்கிணைப்பது என்பது சிரமமான காரியம். எனவே இதற்கு எந்தக் கோரிக்கையும் அனுப்பவேண்டாம். மக்களின் கோரிக்கைகளை நேரடியாகப் பெற்று நடவடிக்கை எடுக்க வேறு ஏதேனும் ஏற்பாடுகள் செய்வது குறித்து பரிசீலிக்கிறோம். அதுகுறித்து பின்னர் அறிவிக்கிறோம்" என தெரிவித்திருக்கிறார்.

மாறாக சுகாதார துறை சார்பில் மக்களுக்கு அந்த வாட்ஸ்அப் மெசேஜ் யாரும் நம்ப வேண்டாம் மக்கள் யாரும் மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு கோரிக்கைகளை அனுப்பிவைக்க வேண்டாம். மாறாக, அரசின் கொரோனா உதவி மைய எண்களான 044 – 29510400, 044 – 29510500, 044 – 24300300, 044 – 46274446, 9444340496, 8754448477 ஆகியவற்றை நாடலாம்" என தெரிவித்துள்ளனர்.

போகிற போக்கில் யாராவது விஷமிகள் விளையாட்டாக செய்வது எந்த அளவிற்கு வந்து நிற்கிறது பாருங்கள்.

Source - Vikatan

Similar News