கோவில் சாப்பாடு கொரோனா நோயாளிகளுக்கு.. ஷாக் அடிக்கும் கரூர் 'தளபதி கிச்சன் திட்டம்' - பிராண்ட் நேம் வாங்க போராடும் தி.மு.க!

Update: 2021-05-15 01:15 GMT

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்குத் தினமும் வழங்கப்பட்டு வந்த அன்னதானம் கொரோனா நோயாளிகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்து சமய அறநலத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல் படி, தினந்தோறும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் வழி நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது, கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவியாக இந்த அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இதனைப்போலவே கரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு ஏழை மக்களுக்கு உணவு வழஙகும் திட்டத்தை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இதற்கு 'தளபதி கிச்சன் திட்டம்' என பெயரிடப்பட்டுள்ளது. 

இது குறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ' ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்கள் உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஏழை மக்களுக்கு தினந்தோறும் முன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அம்மா உணவகங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் பெயரில் ஒரு பிராண்ட் நேம் உருவாக்க திமுகவினர் முயற்சித்து வருவது இதன் மூலம் அம்பலமாகிவிட்டது. 

Similar News