தஞ்சை அரசு மருத்துவமனை வாசலில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் - படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் அவதி!

Update: 2021-05-16 02:15 GMT

தஞ்சையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வருபவர்கள் 12 மணி நேரம் வரை ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருபவர்கள் ஆம்புலன்ஸிலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய துயரநிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 32,903 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,637 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,891 பேர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த மூன்று நாள்களில் மட்டுமே 28 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிகரிக்கும் நோய்தொற்றால் ஆக்ஸிஜன் படுக்கைகள் பெரும்பாலும் நிறைந்துவிட்டதால் கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருபவர்கள் ஆம்புலன்ஸிலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவிவருகிறது.

Similar News