மதமாற்றம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திய எம்.பியை கைது செய்து கொடுமைப்படுத்திய காவல்துறை!
ஆந்திராவில் மத மாற்றம் அதிக அளவில் நடப்பதாகவும் உண்மையில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை 25% இருக்கும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி ராகு ராமகிருஷ்ண ராஜுவை கைது செய்த ஆந்திர சிஐடி போலீசார் அவரை அடித்து சித்திரவதை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை விசாரணையின் போது காவலர்கள் கடுமையாகத் தாக்கியதில் அவரது கால்கள் காயமுற்ற படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், பல தரப்பினரும் ஜகன் மோஅ ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே 14 அன்று ரகு ராமகிருஷ்ண ராஜுவின் வீட்டுக்குச் சென்ற 30 காவலர்கள் கொண்ட படை, வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசியதாக அவர் மீது வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றது. இந்த வழக்கில் அவர் மீது கொடுமையான பிரிவு 124(A)ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்னர் ராமகிருஷ்ண ராஜு ஆந்திராவில் ஏமாற்று வேலை, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது, மிரட்டல் விடுவது என்று பல சட்டவிரோதமான முறைகளில் மக்கள் மதம் மாற்றப்படுவதாகவும் இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து இருந்தார். இதனால் சக கட்சி ஆட்களிடம் இருந்தே தனக்கு மிரட்டல் வருவதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அவர் கூறிய நிலையில், மத்திய அரசு அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்தது.
அண்மையில் ஆந்திர முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜகன் மோகன் ரெட்டிக்கு அளிக்கப்பட்ட பெயில் ரத்த செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததில் இருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிய நிலையில் அவரைக் கைது செய்த காவல் துறை அடித்து கொடுமைப்படுத்தியதாக வெளியான புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறலுக்கு பாஜக தலைவர்களும் தன்னார்வ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.