தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தி.மு.க எம்.பி : தமிழின விரோதியா தி.மு.க?

Update: 2021-05-17 06:15 GMT

ஒரு நாட்டின் பாரம்பரியத்தை காக்க வேணுடும் என்றால் அந்த நாட்டின் சம்பிரதாயங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், உணவு முறை, வைத்திய முறை, வாழ்க்கை முறை, உறவு முறை என பாரம்பரியமாக கடைபிடிக்கும் அனைத்தையும் விடாமல் தொன்றுதொட்டு கடைபிடித்தால் மட்டுமே அந்த சமுதாயம் அழியாமல் பாதுகாக்கப்படும்.

இதில் மனிதன் வாழ இன்றியமையாதது உணவு முறை மற்றும் வைத்திய முறை, ஏனெனில் இவை இரண்டுமே அந்த மக்கள் வாழும் மண்ணின் சீதோஷ்ண நிலை, சுற்றுசூழலுக்கு ஏற்ப கடைபிடிக்கப்பட்டிருக்கும். இவை இரண்டும் மாறுபட்டால் அந்த மக்களின் ஆரோக்கியம் தடைபடும் வியாதி, இறப்புகள் அதிகமாகும்.

கொரோனோ இரண்டாம் அலை மிகுந்த பாதிப்பை நம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நம் தமிழகம் இந்திய அளவில் பாதிப்பில் முதல் ஐந்து இடங்களில் வருகிறது. அந்தளவிற்கு தமிழ்நாடு கொரோனோ இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்ந நிலையில் நம் முன்னோர்கள் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்பது போன்ன வழக்கங்களை கடைபிடித்து பழக்கப்பட்டவர்கள் அப்படி இருக்கும் போது கொரோனோ நோய் தொற்று சுவாச குழாய், நுரையீரல் போன்றவற்றை பாதிப்படைய செய்து இறுதியில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு செயற்கை சுவாசம் பொறுத்தி கொரோனோ பாதித்த மனிதரின் நோய் எதிர்ப்பு சக்திக்கேற்ப பிழைப்பதும் அல்லது சிகிச்சை பலனின்றி இறப்பதும் நடக்கிறது.

அந்த வகையில் கொரோனோ இரண்டாம் அலை பல உயிர்களை பறித்து வரும் நிலையில் தமிழக அரசு தமிழகத்தின் சில இடங்களில் "நீராவி" பிடிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் மருத்துவ முறைப்படி 'நீராவி' பிடிப்பதால் மனிதரின் சுவாச பாதை சீராகி, சளி, சுவாச கோளாறுகள், நுரையீரலுக்கு செல்லும் பாதை போன்றவை சீராகி நலம் பெறுவர் என்பது காலம்தொட்டே தமிழர்களின் மரபு. இதனைத்தான் தமிழக அரசும் ஆங்காங்கே சில இடங்களில் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் கொரோனோ பாதிப்பு சுவாச மண்டலத்தை குறிவைத்து தாக்குவதால் இவ்வாறு

'நீராவி' பிடிப்பதால் கொரோனோ வீரியம் குறைய வாய்ப்பிருபதால் தமிழக அரசு இதனை அமல்படுத்தியுள்ளது.

ஆனால் தமிழ் கலாச்சாரம், இறை வழிபாட்டு முறைகளை கிண்டல் செய்து பழக்கப்பட்ட தி.மு.க. தர்மபுரி எம்.பி செந்தில்குமார் வழக்கம்போல் இந்த முறையையும் கிண்டல் செய்து கூடாது என்கிற ரீதியில் கண்டித்துள்ளார் இத்தனைக்கும் இதனை அமல்படுத்தியதே தி.மு.க அரசுதான். இதனை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "திமுக ஒரு முற்போக்கான பகுத்தறிவு கட்சி,

COVID சிகிச்சைக்காக சித்த மருந்து போன்ற விஞ்ஞானமற்ற நிரூபிக்கப்படாத மருத்துவ பரிசோதனைகளில் அரசு ஈடுபடுவதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது

அல்லது இந்த தொற்றுநோயான மனித வளங்களை வீணடிக்கும் நேரத்தில் நிரூபிக்கப்பட்ட நீராவி உள்ளிழுக்கும் எந்த ஆதாரமும் செய்யப்படவில்லை.

தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில்'இன் சிறந்த மருத்துவர்கள் குழுவை உருவாக்கி நவீன அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையிலான மருத்துவத்தின் அடிப்படையில் விஞ்ஞான முறையில் விஷயங்களைச் செய்ய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்." என குறிப்பிட்ட்டுள்ளார்.


இவ்வளவிற்கும் இவர் ஒரு மருத்துவர் என்பது கூடுதல் தகவல், அதாவது 'நீராவி' பிடிப்பதால் கொரோனோ வராது என யாரும் கூறவில்லை மாறாக கொரோனோ வருவதற்கான வாய்ப்புகள் சுவாசப்பாதையை 'நீராவி' பிடிப்பதன் மூலம் சரி செய்வதால் குறைவு என்பதாலே இந்த வசதியை தமிழக அரசு சில இடங்களில் அமல்படுத்தியுள்ளது.

ஆனால் தமிழர் வழிபாடு, சடங்கு, சம்பிரதாயம், பழக்க வழக்கம் என அனைத்தையும் கிண்டல் செய்து பழக்கப்பட்ட 'திராவிடன் ஸ்டாக்' தி.மு.க எம்.பி செந்தில்குமார் இந்த தமிழ் மருத்துவ முறையையும் கிண்டல் செய்கிறார்.

இதனால் தமிழர் பாரம்பர்ய பண்பாட்டிற்கே தி.மு.க எதிரி என்பது போல் தோன்றுகிறது. அதனை செந்தில்குமார் எம்.பி'யின் நடவடிக்கைகளும் நிரூபனம் செய்கின்றன

Similar News