தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசி வழங்கக்கோரி மத்திய அமைச்சருக்கு வானதி சீனிவாசன் கடிதம்!
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சில நாட்கள் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தடுப்பூசி விநியோகத்தில் பாரபட்சம் பார்ப்பதாகவும், குறிப்பாக கோயம்பத்தூர் தொகுதிக்கு மிகவும் சொற்ப அளவுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டை அடுத்து நேற்று அவர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது "கோயம்பத்தூரில் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகமாகி வருகிறது கடந்த பத்து நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாயிரத்தை தாண்டி உள்ளது. கோவை தொழில் நகரம் என்பதால் இங்கு தொழில் துறையில் இருப்பவர்களில் 70% பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் இருக்கிறது. எனவே, தாங்கள் தமிழ்நாட்டிற்கு அதிகமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் குறிப்பாக கோயம்புத்தூருக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளை கிடைக்கும்படி நீங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.