புயல், வெள்ளத்தையும் பொருட்படுத்தாது வீதி வீதியாக சென்று மக்களுக்கு உதவும் நாகர்கோயில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி!
வங்கக்கடலில் உருவாகியுள்ள யஸ் புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்க உள்ளதால் இன்று வங்கக்கடல் ஒட்டி உள்ள மாவட்டங்களில் புயல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த யஸ் புயல் காரணமாக குமரி மாவட்டத்திலும் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீட்டை சேதப்படுத்தி உள்ளது.
இந்த யஸ் புயலின் பாதிப்பால் குமாரி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புத்தேரி குளம் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிப்பை ஏற்பட்டிருக்கும் அந்த பகுதியை அந்த தொகுதி எம்.எல்.எ திரு எம்.ஆர் .காந்தி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை உடனே பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட திரு.எம்.ஆர். காந்தியின் செயல் அவருடைய நேர்மை மற்றும் மக்களுக்காக சேவை செய்யும் மனப்பான்மையை காட்டுகிறது. பல அரசியல்வாதிகள் மக்களை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சந்திக்கும் நிலையில் திரு. காந்தி போன்ற ஒரு அரசியல் தலைவர் அந்த தொகுதி மக்களுக்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம் .