விழுப்புரத்தில் செய்தியாளர்களை அவமதித்த பொன்முடி : வன்மையாக கண்டித்த ஓ.பி.எஸ்..!

Update: 2021-05-29 14:45 GMT

தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்கள் தொடர்ச்சியாக சபையில் அநாகரீகமாகவும், ஒருமையில் வசைபாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக திரு. ஆர்.எஸ். பாரதி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இம்மாதிரியான அநாகரிகமான பேச்சை பேசி வந்த நிலையில் தற்போது திரு. பொன்முடியும் செய்தியாளர்களை அவமதிக்கும் விதமாக பேசியதை திரு. ஓ. பன்னீர் செல்வம் வன்மையாக கண்டித்துள்ளார்.


திரு. ஓ.பி எஸ் கூறுகையில்  விழுப்புரம் மாவட்டம் மேலமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைக்க சென்ற திரு. பொன்முடியிடம் ஊக்க தொகை வேண்டி மனு அளிக்க  வந்த பத்திரிகையாளர்களை "என்னையா நீ ரிப்போர்ட்டர் உங்களால் தான் கொரோனா நோய் தொற்று பரவுது" என்று ஒருமையில் பேசி அவர்களை அவமதித்துள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மழை, வெள்ளம், பேரிடர், நோய்த்தொற்று என்று இரவுபகல் பாராமல்  செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முன்களப்பணியாளர்களை அவமதித்து அவர்களின் மனதை காயப்படுத்தியுள்ளார்.

 "இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் சபை நாகரிகம் அறிந்து அநாகரிகமாக நடந்து கொள்ளாதவாறு அனைவரையும் அறிவுறுத்தி வைக்க வேண்டுமென திரு. ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக" அவர் குறிப்பிட்டிருந்தார். 

Tags:    

Similar News